
ரொமான்டிக் வாரத்தின் முதல் நாள் இன்று பிப்ரவரி 7-ம் தேதி ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில், காதலர்கள் தனது மனம் கவர்ந்தவருக்கு ரோஜா பூக்களை பரிசாக கொடுப்பார்கள்.
ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றவுடன் 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதலர் தினம்'' திரைப்பட பாடல் வரிகள் தான். அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை என்றென்றும் கிறங்கடிக்க வைக்கிறது. குறிப்பாக, இன்று ரோஜா தினம் என்றவுடன்,
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா என்ற பாடல் வரிகள் அனைவரின் கண் முன் வந்து செல்லும்.
இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது. உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும்.
ரொமான்டிக் வாரத்தின் முதல் நாள் பிப்ரவரி 7-ம் தேதி ரோஜா தினம்:
இந்த தினங்கள் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலிப்பவர்களுக்கு காதல் எப்பொழுதுமே ஒரு மென்மையான விஷயம். அதனால் தான் காதலை பூக்களுடன் ஒப்பிடுகிறார்கள். அதிலும் ரெட் கலர் ரோஜாப் பூக்கள் எல்லாருக்கும் பிடித்தமான பரிசு. ரோஜா தினமான இன்று ரோஜாப் பூக்களைப் பரிசுகளாக வழங்கும் தினம். காதலின் பிணைப்பைத் தெரிவிக்கும் அன்பின் குறியீடாகும். வெறும் ரோஜாப் பூக்கள் பரிமாற்றம் அல்ல, அன்பின் பரிமாற்றம், காதல் வாழ்த்துகளின் பரிமாற்ற தினமாகும் இது.
அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள். எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், இன்று உங்க காதலர் மற்றும் காதலிக்கு ரோஜாப் பூக்களை பரிசாக கொடுக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.