வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி...! இன்சூரன்ஸ் கட்டணம் அதிரடி உயர்வு...எவ்வளவு தெரியுமா..?

First Published Mar 30, 2018, 12:47 PM IST
Highlights
shocking news for bike riders insurance amount incresed since april 1


2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை,அதிரடியாக  உயர்த்தி உள்ளது,இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம்.இந்த  திட்டம் வரும் 1 ஆம்  தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.....

அதன்படி,  

151 சி.சி.முதல் 350 சி.சி - ரூ.985 (கடந்த  ஆண்டை விட ரூ.98 அதிகம்) அதாவது 11 % உயர்வு....

350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 (ரூ.1,304 அதிகம்) ஆகும். அதாவது 128 %

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு - ரூ.24 ,190 (ரூ.4 ஆயிரத்து 523 அதிகம்) 23 % அதிகம்....

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32,367 (ரூ.3,468 அதிகம்)..அதாவது 12 % அதிகம்

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு - ரூ.39,849 (ரூ.8,223 அதிகம்) 26 %

40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு-  ரூ.38,308 (ரூ.5,284 அதிகம்) அதாவது 16 %  அதிகம்

இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தோரும் உயர்த்தப்பட்டு வரும், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொடர்ந்து  அதிகரிக்கப்பட்டு வருவதால், மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் மாற்றி அமைக்கப்பட்டு  வருவதாலும்,விலையும் ஒவ்வொரு நாளும் மிக குறைந்த அளவில் அதிகரிக்கப்பட்டு வருவதாலும் மக்கள்  கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்

பெட்ரோல்  டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் வர வேண்டும் என பலரும் கோரிக்கை  வைத்தனர்.

இந்நிலையில் இன்சூரன்ஸ் தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பெரும்   அதிருப்தி அடைந்துள்ளனர்.  

click me!