உஷார்...கொரோனா ஏற்பட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரத்யேக அறிகுறி!

Published : May 17, 2020, 05:07 PM ISTUpdated : May 17, 2020, 05:08 PM IST
உஷார்...கொரோனா ஏற்பட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரத்யேக அறிகுறி!

சுருக்கம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பல குழந்தைகள் பாதிப்பட்டனர். இப்படி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பெரியவர்களை விட மிகவும் வித்தியாசமான பிரத்தேயேக அறிகுறிகள் உடலில் தோன்றும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.  

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பெரியவர்களை விட மிகவும் வித்தியாசமான பிரத்தேயேக அறிகுறிகள் உடலில் தோன்றும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து பிரபல நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... 

" தொடர்ந்து 8 நாட்களாக காய்ச்சல், இருமல், போன்றவற்றால் அவதிப்பட்ட 8 வயது ஆண் குழந்தைக்கு இப்படி பட்ட வித்தியாசமான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.  

இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தொடர்ந்து  ஆறு நாட்கள் நிமோனியா தொடர்பான மருந்துகள் கொடுத்தும் பலன் இல்லாத நிலையில், அவனை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் சிறுவனின் பெற்றோர்கள். 

அந்த குழந்தைக்கு,  கண்கள் சிவந்தும்,  உதடுகளும் தொண்டையும் சிவந்து உடலில் தடிப்புகள் ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத் திணறலும் இருந்துள்ளது.

இதனால் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையை துவங்கியுள்ளனர் மருத்துவர்கள். மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த முந்தைய மருத்துவமனையில்  கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்த ரிப்போர்ட் இருந்த போதிலும்,  ஏழாவது நாளில் மீண்டும் செய்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியது.

அதன் பின்னர் சுவாசக் கோளாறு அதி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிறுவனின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை.  பின் அந்த சிறுவனுக்கு ரத்த நாளங்கள் வீங்கி கொள்ளும் அல்லது ஒரு வகையான பாக்டீரியா தொற்றால் ஏற்படும் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்'  இருக்கலாம் என்று சந்தேகம் மருத்துவர்களுக்கு வந்துள்ளது. 


காரணம் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கொரோனா தொற்றால் பாதித்த குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்துள்ளது. ரத்தப் பரிசோதனையில் சிறுவனை ரத்தநாள சுவர்களில் வீக்கம் இருப்பது உறுதியானது.
எனவே ஆண்டிபயாட்டிக் மருந்துகளுடன் பிளாஸ்மா சிகிச்சை குறைந்த வீரியம் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரை கொடுத்தும் இந்த சிகிச்சை செய்துள்ளனர். அடுத்த 72 மணி நேரத்திற்கு காய்ச்சல் குறையவில்லை. அதன் பின்னர் இவனுக்கு வந்திருப்பது இடியோபதிக் ஆர்த்ரட்டிஸ் எனப்படும் குழந்தைகளை தாக்கும் மூட்டு முடக்குவாதம் என்று கண்டறிந்து அதற்கான மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். உடனடியாகக் காய்ச்சல் குறைய துவங்கியது. மற்ற பிரச்சனைகளும் படிப்படியாக சரியாகிவிட்டத அந்த சிறுவனும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் போது வழக்கமான அறிகுறிகளுடன் இது போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என்பதே...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்