வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை உற்சாகப்படுத்தும் நடிகர் சூரி வீடியோ காட்சி.!! சந்தோசத்தில் சிங்கப்பூர் அரசு

By T BalamurukanFirst Published May 15, 2020, 9:05 PM IST
Highlights
கொரோனா கொடூரத்தை மறக்கச் செய்யும் நடிகர் சூரியின் வீடியோ காட்சி வெளிநாடு வாழ்இந்தியர்களை உற்சாகம் அடையச்செய்திருக்கிறது.

T.Balamurukan

கொரோனா கொடூரத்தை மறக்கச் செய்யும் நடிகர் சூரியின் வீடியோ காட்சி வெளிநாடு வாழ்இந்தியர்களை உற்சாகம் அடையச்செய்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று உலகநாடுகளில் எல்லாம் பரவி இதுவரைக்கும் 1லட்சம் பேரை காவு வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் பல்வேறு விதமான விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகின்றது.இந்தியாவில் ஆரோக்கிய சேது என்கிற செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் திரைப்பட நடிகர்கள் தினந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். காமெடி நடிகர் சூரி ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த படியே தன் குழந்தைகளுடன் பல்வேறு விதமான காட்சிகளை யூடியூப் மூலம் வெளியிட்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் போலீசாரிடம் 'ஆட்டோகிராப்' வாங்கி அவர்களை உற்சாகப்படுத்தியதோடு பத்திரிகையாளர்கள் பணி இந்த கொரோனா காலத்தில் சிறப்பானது. ஊரடங்கில் மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும் வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் கொண்டு வந்து சேர்த்த செய்திகளால் தான் நாங்கள் எல்லாம் கொரொனா பற்றியும் அரசாங்கம் அறிவிக்கும் அறிவிப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்றார். அதே நேரத்தில் பொதுமக்கள் எப்படி கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினார்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் கொரோனாவால் முடங்கி கிடக்கும் தமிழர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் செய்துள்ள வசதிகள் பற்றிப் பேசும்  சூரி கொரோனா பற்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சொந்த ஊரில் இருக்கும் குடும்பத்தார், உறவினர் ஆகியோரிடம் வீடியோ மூலம் உரையாடலை மேற்கொள்ளுமாறு ஊழியர்களை ஊக்குவித்திருக்கிறார் சூரி. சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தரவு, விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் சூரி தனது காமெடி பாணியில் பேசி ஊழியர்களுக்கு உற்சாகம் ஊட்டியிருக்கிறார் அந்த வீடியோவில்.அந்த வீடியோவில்ராயல் புரொடக்‌ஷன்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தின் சமூகத் திட்டப்பணிகளில்  ஒன்று என்று அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவின் இடையிடையே அவர் நடித்த காமெடி காட்சிகள் வந்து போகிறது.இது பார்ப்பவர்களுக்கு மனசுக்கு கொஞ்ச நேரம் தன்னை மறந்து சிரிக்க வைக்கிறது.இதுவும் ஒரு மருந்து தான் சூரி. 

click me!