ஒரு ஆணுக்கு இரண்டு மனைவி.. ஒட்டுமொத்த கிராமமே இப்படித்தான்.!! வினோத கிராமம்.!!

Published : May 15, 2020, 08:22 PM IST
ஒரு ஆணுக்கு இரண்டு மனைவி.. ஒட்டுமொத்த கிராமமே இப்படித்தான்.!! வினோத கிராமம்.!!

சுருக்கம்

அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். 


"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"என்பார்கள் ஒரு ஆணுக்கு இரண்டு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.இப்படியொரு சம்பவம் ஒரு கிராமத்ததில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைத்துள்ளது. இந்த பகுதியில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். 


அந்த கிராமத்தில் உள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று அவர்கள் பின்பற்றும் மத சடங்கு இல்லை. இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம். இது மதங்களை கடந்து அனைவரிடமும் இருக்கிறது. அப்பகுதியில் 70 முஸ்லீம் குடும்பங்களும்  வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே பழக்கத்தை தான் பின் பற்றுகின்றனர். 

அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏன் என்றால் முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காதாம். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர். பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என கூறப்படுகிறது.

கிராமத்தில் நிறைய பேர் தங்கள் முதல் மனைவியுடன் ஒரு குழந்தையைப் பெறுவதற்காக தங்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி வரை காத்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், மீண்டும் திருமணம் செய்துகொண்டபோது, குழந்தைகளைப் பெறுகிறார்கள்.ஒருவர் இரண்டு முறை திருமணம் செய்து கொள்ள ஒரே காரணம் இதுதான். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Blood Clot : இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க
Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!