மதுரையில் சலூன் கடைக்காரர் என்ன செய்தார் தொியுமா? உதவி செய்ய பணம் முக்கியம் அல்ல:மனசு இருந்தால் போதும்!!

By T BalamurukanFirst Published May 9, 2020, 7:09 PM IST
Highlights

நான் வரும் போது ஒன்றும் இல்லாமல் மதுரை மீனாட்சி பட்டினத்துக்கு வந்தேன். என்னை வாழ வைத்தது இந்த மண்னும் மக்களும் தான். நான் சம்பாதித்ததும் இந்த மக்களை வைத்து தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் தவிக்கும் என் மக்களை பார்க்கும் போது என்னாலும் என் குடும்பத்தாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

 

நான் வரும் போது ஒன்றும் இல்லாமல் மதுரை மீனாட்சி பட்டினத்துக்கு வந்தேன். என்னை வாழ வைத்தது இந்த மண்னும் மக்களும் தான். நான் சம்பாதித்ததும் இந்த மக்களை வைத்து தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் தவிக்கும் என் மக்களை பார்க்கும் போது என்னாலும் என் குடும்பத்தாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் என் மகளின் எதிர்காலத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து 5லட்சம் மதிப்பிலான உணவு பொருள்களையும் மளிகைச்சாமான்களையும் காய்கறிகளையும் வழங்கினேன் என்று சொல்லும் போது மோகன் கண்களில் இருந்து அவரை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது... இது தான் மனிதநேயம் என்பதற்கு சான்று மோகனின் உதவிசெய்யும் மனது தான்.என்பதைக் காட்டியிருக்கிறது.

 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலமடை பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.வீடுகளில் முடங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் மோகனிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்படுவதை அவரிடம் சொல்லும் போது அதைக்கேட்டு கொண்டிருந்த அவரின் மகள் " அப்பா என் படிப்பிற்கு வைத்திருக்கும் பணத்தில் இருந்து பாதிக்கப்பட்டு இருக்கும் இவர்களுக்கு முதலில் உதவுங்கள் என்று சொன்னதும். பதறிப்போன மோகன் மகளின் பெருன்தன்மையை பார்த்து உறைந்து போனார். உடனே வங்கியில் இருந்து 5லட்சம் பணத்தை எடுத்து வந்து மேலமடை பகுதியில் வாழும் கூலித் தொழிலாளர்கள் 650 வீடுகளுக்கு அரிசி காய்கறி மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருள்கள் மதுரை மாநகர உதவி ஆணையர் லில்லி கிரேசி அவர்களின் தலைமையில்வழங்கியிருக்கிறார்.

சலூன் கடை நடத்தி வரும் மோகன்.. நான் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து மதுரைக்கு வந்தேன். இங்கு வந்து சலூன் கடை வைத்து சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கிறேன். என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கு அவர்கள் சாப்பாட்டிற்கு  கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அதனால் தான் என் மகளின் ஆலோசனைப்படி இந்த உதவியை செய்தேன். என் மகளோ என் படிப்ப செலவுக்கு பிறக பார்த்துக்கொள்ளலாம் முதலில் சாப்பாட்டு உதவி செய்யுங்கள் என்ற வார்த்தை என் இதயத்தை வெடிக்கச் செய்தது. உயிரோடு இருந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.என்றார்.

click me!