
நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் சாப்பிடும் போது எதை, எப்படி சாப்பிட வேண்டும் என்று சிறு வயது முதலே கற்றிருப்போம். ஆனால் அதையும் விட சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 7 விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிட்ட உடன் செய்யக்கூடாத 7 விஷயங்கள் :
1. உடனே தூங்காதே!
சாப்பிட்ட பிறகு உடனே தூங்கவே கூடாது. சாப்பிட்ட 2-3 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். இல்லையெனில் அஜீரணம் பிரச்சனை ஏற்படும்.
2. அதிக தண்ணீர் குடிக்காதே!
சாப்பிட்ட உடனே அதிக தண்ணீர் குடிப்பது மோசமான செரிமான வீக்கம் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
3. குளிக்காதே!
சாப்பிட்ட உடனே சூடான நீரில் குளித்தால் உடலின் வெப்பநிலை உயர்ந்து, உடல் அழுத்தம் அதிகரித்து, உணவு ஜீரணிப்பது மெதுவாகும். அதுபோல குளிர்ந்த நீரில் குளித்தால் ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் மெதுவாகும். இதனால் அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் ஆகியவை ஏற்படும்.
4. காஃபின், ஆல்கஹால் மற்றும் புகை பிடித்தல் வேண்டாம் :
சாப்பிட்ட பிறகு காஃபின் கலந்த பானங்கள், ஆல்கஹால், புகை பிடித்தல் தவிர்ப்பது நல்லது.இல்லையெனில், உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் புரிஞ்சுவதில் தடை ஏற்படும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
5. உடற்பயிற்சி செய்யாதே!
சாப்பிட்ட பின் உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் ஆனது தசையின் பக்கமாக திரும்பி விடும். இதனால் குமட்டல், கடுமையான வயிற்று வலி ஆகியவை ஏற்படும். சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 2 மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம்.
6. அதிகமாக உழைக்காதே!
சாப்பிட்ட பிறகு குனிந்து வேலை செய்தல், அதிக எடையை தூக்குதல் போன்றவை வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி செரிமானத்தை மெதுவாக்கும். எனவே சாப்பிட்ட பிறகு அதிகமாக உழைக்க வேண்டாம்.
7. பழங்கள் சாப்பிடாதே!
நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் சில துண்டு பழங்கள் சாப்பிடுவது பழக்கமாக வைத்துள்ளனர். பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிட வேண்டாம். உணவுக்குப் பிறகு சுமார் ரெண்டு மணி நேரம் கழித்து தான் பழங்கள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.