Parenting Tips : பெற்றோரே! உங்க குழந்தைங்க ரொம்ப சண்டை போடுறாங்களா? கூட பொறந்தவங்க கிட்ட அன்பா இருக்க டிப்ஸ்!!

Published : Sep 02, 2025, 03:17 PM IST
How to stop sibling rivalry

சுருக்கம்

குழந்தைகள் தங்களுடைய உடன்பிறந்தவர்களுடன் அடிக்கடி சண்டை போடாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் அதற்கு எதிரான விஷயங்களை அவர்களே செய்துவிடுகின்றனர். பெற்றோர் அறியாமல் செய்யும் செயல்கள், வார்த்தைகள் கூட குழந்தைகளுக்குள் சண்டை மூட்டிவிடுகின்றனர். இந்த பதிவில் குழந்தைகள் தங்கள் உடன்பிறந்தோரிடம் சண்டைப் போடாமல் ஒற்றுமையாக இருக்க செய்ய வேண்டிய சில விஷயங்களை காணலாம்.

"நீ உன் அண்ணனை/அக்காவை போல இருக்கமாட்டீயா?" என குழந்தைகளிடம் சொல்லும்போது அவர்களுக்கு கோபம் வரும். ஒருபோதும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை ஒப்பிடக் கூடாது. இது அவர்களுக்குள் பொறாமையை ஏற்படுத்தி சண்டைக்கு வழிவகுக்கும். இதைத் தடுக்க ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் தனித்துவமான சிறப்புகள், பலங்களை பெற்றோர் கொண்டாட வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதிய கவனத்தை கொடுக்க வேண்டும். ஒரு நாளில் 10 முதல் 15 நிமிடங்களாவது பெற்றோரும் குழந்தையும் தனிமையாக நேரம் செலவிட்டால் அவர்களுக்குள் போட்டி மனப்பான்மை குறையும்.

குழந்தைகளை நேரடியாக மோதச் செய்யும் போட்டிகளாக இல்லாமல் வீட்டு வேலைகளை சவால்களாக கொடுக்கலாம். பொம்மைகளை சுத்தம் செய்து எடுத்து வைத்தல், தோட்டத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை பழக்கலாம். குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்க விடாதீர்கள். தனிப்பட்ட விஷயங்களை, இடத்தை மதிக்க வேண்டும் என வீட்டில் சில விதிகளை வைத்திருங்கள். இதை கடைபிடிப்பதால் சண்டைகள் அதிகரிப்பதைத் தடுக்கிறது.

குழந்தைகள் எப்போதும் பெற்றோரைதான் பிரதிபலிப்பார்கள். உங்களுடைய பேச்சு, பழக்க வழக்கங்களை பின்பற்றுவார்கள். கருத்து வேறுபாடுகளை சண்டை போடாமல் எப்படி கையாள வேண்டும் என புரிய வையுங்கள். குழந்தைகள் தங்கள் உடன்பிறப்புகள் இணைந்து புதிர்கள், ஏதேனும் விளையாட்டு அல்லது வீட்டு வேலைகளில் இணைந்து செயல்பட்டால் அதை பாராட்டி முன்னிலைப்படுத்துங்கள். இப்படி பகிரப்படும் வெற்றியின் ருசி அவர்களின் உறவை பலப்படுத்தும்.

பெரிய குழந்தைகளுக்கு பொறுப்புகள் பிடிக்கும். இளைய குழந்தைகள் நியாயத்தை விரும்புவார்கள். இதை புரிந்து கொண்டு பெற்றோர் நடந்தால் மனக்கசப்பைத் தடுக்கும். குழந்தைகளின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு பொறுப்புகளை கொடுங்கள். அதன்படி அவர்கள் வளரும்போது போட்டி பொறாமை குறையும். ஓவியர், கதைசொல்லி, பாடகர்/பாடகி, உதவியாளர் என வெவ்வேறு வெளிச்சத்திற்கான வழியில் குழந்தைகள் சென்றால் அவர்களுக்கு போட்டி குறையும்.

குழந்தைகளின் அனைத்து சண்டைக்கும் பெற்றோர் தலையிடத் தேவையில்லை. சின்ன சச்சரவுகளை குழந்தைகளே தீர்க்க கொள்ள பெற்றோர் அனுமதிக்க வேண்டும். இது எதிர்காலத்தில் பெரிய மோதல்களைத் தடுக்கும். குழந்தைகள் குழுவாக செயல்படுவதை ஊக்குவிக்க வேண்டும். மரியாதையும், குழுப்பணியும் பெற்றோர் ஊக்குவித்தால் குழந்தைகளுக்குள் உடன்பிறந்தோர் போட்டி மனநிலை குறையும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்