Pillow : உங்க தலையணை 'இப்படி' இருக்கா? அப்ப உடனே மாத்திடுங்க! இல்லன்னா டேஞ்சர்

Published : Aug 30, 2025, 01:10 PM IST
pillow

சுருக்கம்

தலையணையை எப்போது, எதற்காக மாற்ற வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. அது தலையணைக்கும் பொருந்தும். ஆம், நாம் தூங்குவதற்கு பயன்படுத்தப்படும் தலையணை எவ்வளவு அவசியமோ, அது குறித்த சுகாதார விழிப்புணர்வையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதாவது, நாம் பயன்படுத்தும் தலையணையை எப்படி பராமரிக்க வேண்டும்? எவ்வளவு நாள் பயன்படுத்த வேண்டும்? என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தலையணையில் சில அறிகுறிகள் தோன்றினாள் உடனே மாற்ற வேண்டும். இந்த பதிவில் தலையணையை எப்போது? ஏன்? மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தலையணையை ஏன் மாற்றனும்?

நாம் பயன்படுத்தும் தலையணையானது நமது தலைமுடி மற்றும் உடலுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கும். இதனால் அவற்றில் எஎண்ணெய், தூசி, அழுக்குகள் போன்றவைப்பட்டு, துர்நாற்றம், பூஞ்சை போன்ற பாதிப்புகளை ஏற்படும். இந்த மாதிரியான தலையணை தொடர்ந்து பயன்படுத்தினால் கழுத்து தோள்பட்டை வலி ஏற்படுவது மட்டுமல்லாமல் தலைமுடி உதிர்தல், முகப்பரு பிரச்சனை போன்ற பாதிப்புகளும் ஏற்படும். மேலும் உங்களது தூக்கமும் பாதிக்கப்படும்.

இந்த அறிகுறிகளை கவனிங்க..

நீங்கள் பயன்படுத்தும் தலையணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தோன்றினால் உடனே மாற்றி விடுங்கள். அவை..

- தலையணையில் கறைகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ உடனே அதை மாற்றி விடுங்கள்.

- தலையணை தட்டையாக இருந்தால் அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

- நீங்கள் பயன்படுத்தும் தலையணை உங்களது தூக்கத்துக்கு இடையூறாக இருந்தால் கண்டிப்பாக மாற்றி விடுங்கள்.

- சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் தலையணையால் தூங்கி எழுதவுடன் கழுத்து வலி, தோள்பட்டை வலி ஏற்படும். இதற்கு காரணம் அதனுள் இருக்கும் பஞ்சு நைந்து இருப்பது தான். அப்படி நீங்கள் உணர்ந்தால் அவற்றை மாற்று விடுங்கள்.

தலையணையை எப்போது மாற்றனும்?

1. பாலிப்போம் தலையணை - இந்த வகையான தலையணையை 2-3 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது தான் நல்லது. இல்லையெனில் உங்கள் தூக்கத்தில் இடையூறு ஏற்படும்.

2. லேடெக்ஸ் தலையணை - லேடெக்ஸ் தலையணை நீங்கள் 2-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றினால் போதும். ஒருவேளை உங்களது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று நீங்கள் உணர்ந்தால் அந்த சமயத்தில் தலையணையை மாற்றி விடுங்கள்.

3. பஞ்சு தலையணை - இந்த வகையான தலையணையை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். இதை நீங்கள் மூன்று வருடங்கள் வரை பயன்படுத்தலாம். தூக்கத்திற்கு இடையூறு இல்லை என்று நீங்கள் உணர்ந்தாலும் கூட அதற்கு மேலும் பயன்படுத்தலாம். மற்றதை விட இந்த வகையான தலையணையை பயன்படுத்துவது தான் நல்லது. ஏனெனில் இதை பயன்படுத்தினால் தோள்பட்டை வலி, கழுத்து வலி வராது.

தலையணையை பராமரிக்கும் முறை :

- தலையணை வாங்கும்போது அதற்கு கண்டிப்பாக தலையணை உறை போடுங்கள். அப்போதுதான் எண்ணெய்கள், அழுக்குகள், தூசிகள் நேரடியாக அதில் படாது.

- தலையணையில் அழுக்கு இருந்தால் அதை சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைத்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

- தலையணையில் கறை ஏதேனும் பட்டால் உடனே சுத்தம் செய்து விடுங்கள்.

ஒரே தலைகனையை நீண்ட காலம் பயன்படுத்தினால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு. எனவே தலையணையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்றுவது தான் நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்