மே 3 வரை எந்த தளர்வும் கிடையாது... நோய் பரவல் குறையாதலால் கட்டுப்பாடு நீடிக்கும்! தமிழக அரசு அதிரடி...!

thenmozhi g   | Asianet News
Published : Apr 20, 2020, 03:33 PM IST
மே 3 வரை எந்த தளர்வும் கிடையாது... நோய் பரவல் குறையாதலால் கட்டுப்பாடு நீடிக்கும்! தமிழக அரசு அதிரடி...!

சுருக்கம்

வரும் மே 3 வரை  வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள  நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஒருசில தொழில்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

மே 3 வரை எந்த தளர்வும் கிடையாது... நோய் பரவல் குறையாதலால் கட்டுப்பாடு நீடிக்கும்! தமிழக அரசு அதிரடி...!

மே 3 ஆம் தேதி வரை எந்த விதமான  தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு தொடரும் என தமிழக அரசு  தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு அறிவித்தபடியே மே 3 வரை அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கான விதிவிலக்குகள் மட்டுமே தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய் தொற்றுவது குறைந்தால் வல்லுனர்களுடன் ஆலோசித்து இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது



வரும் மே 3 வரை  வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள  நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஒருசில தொழில்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளும் முக்கிய முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.



இந்த நிலையில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் இன்று கட்டுப்பாடு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வல்லுநர் குழுவுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையின் முடிவில்  தளர்வு இல்லாமல் கட்டுப்பாடுகள் மே 3 வரை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



டெல்லி கர்நாடகா பஞ்சாப் தெலங்கானா மகாராஷ்டிரா குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவுதலை கருத்தில் கொண்டு தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய 16ஆம் தேதி ஒரு வல்லுனர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. அந்த குழு முதல் கூட்டத்தை நடத்தி அதனுடைய சட்ட ஆலோசனைகளை முதல் அமைச்சரிடம் இன்று சமர்ப்பித்தது



நோய்த்தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியிருப்பதால் மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே மாதம் மூன்றாம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசால் முடிவு செய்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய் தன்மையை மீண்டும் ஆராய்ந்து நோய்த்தொற்று குறைந்தால் மட்டுமே வல்லுனர் குழுவின் ஆலோசனைகளை பெற்று நிலைமைக்கு ஏற்ப  தளர்வு  குறித்து பின்னர் முடிவு  எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்