கொரோனா பயமா? பலம் சேர்க்கும் "நெல்லிக்காய் துவையல்"...!

By ezhil mozhiFirst Published Apr 20, 2020, 2:31 PM IST
Highlights

கொரோனா பரவி வரும் இந்த ஒரு தருணத்தில், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்வதும், உடலில்  தங்கி உள்ள தேவையில்லாத கழிவு பொருட்களை நீக்கவும் நெல்லிக்காய் மிகவும் உகந்தது.

கொரோனா பயமா? பலம் சேர்க்கும் "நெல்லிக்காய் துவையல்"...! 

உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி என்பதை  பார்க்கலாம் 

தேவையானப் பொருட்கள்

பொருள் - அளவு

உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன் 
சீரகம் - அரை ஸ்பூன் 
வர மிளகாய் - 6
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை 
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
பெரிய நெல்லிக்காய்  - 4
தேங்காய்த்துருவல் -  கால் கப்
பெரிய வெங்காயம் -  1
இஞ்சி- சிறு துண்டு 
கடுகு - கால் டீஸ்பூன்

செய்முறை :

நெல்லிக்காய் துவையல் செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம், இஞ்சி, நெல்லிக்காய், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்

அடுத்து ஒரு.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, மற்றும் நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காய் வதங்கியதும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய்த்துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும் 

வதக்கி ஆற வைத்த கலவை நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான நெல்லிக்காய் துவையல் ரெடி. இதனை வெறும் சாதம் கொண்டும் சாப்பிடலாம். அல்லது டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.

கொரோனாவிற்கு நெல்லிக்காய் துவையல்!
 
கொரோனா பரவி வரும் இந்த ஒரு தருணத்தில், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்வதும், உடலில்  தங்கி உள்ள தேவையில்லாத கழிவு பொருட்களை நீக்கவும் நெல்லிக்காய் மிகவும் உகந்தது. இது தவிர சருமத்திற்கு ஏற்றது நெல்லிக்காய். எனவே நெல்லிக்காய் துவையல் செய்து உண்பது மிகவும் நல்லது. 

click me!