80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை.. ஆனால் கொரோனா உறுதி..! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி!

By ezhil mozhiFirst Published Apr 20, 2020, 1:47 PM IST
Highlights

காய்ச்சல் சளி இருமல் இது போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை.. ஆனால் கொரோனா உறுதி..! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல்,வரட்டு இருமல், கடுமையான மூச்சுத்திணறல் இவை மூன்றும் தான் மிக முக்கிய அறிகுறியாக கருதப்பட்டு வந்தது. இது தவிர்த்து ஒரு சில நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டபோது அதில் பலருக்கும் நுகரும் தன்மை குறைந்து இருப்பதாகவும் சுவையை பிரித்து அறிய முடியாத அளவுக்கு ஒரு சில அறிகுறிகள் கண்டதாகவும் ஆய்வில் தெரியவந்தது.

மேலும் முப்பது சதவீதத்தினருக்கு வயிற்றுப்போக்கு ஒரு சாதாரண விஷயமாக இருந்தது என மற்றொரு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஒரு நிலையில் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆராயும்போது இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர்களில், 80 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி கருத்தை தெரிவித்து உள்ளது 

அதாவது காய்ச்சல் சளி இருமல் இது போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கொரோனா சோதனை செய்யப்படாத நபர்களிடமும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயம் அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது.

click me!