கணவருடன் அப்படி இருக்கும்போது கூட முன்னாள் காதலனின் ஞாபகம்.. குழம்பி தவிக்கும் பெண்ணுக்கு தீர்வு!! 

By Asianet Tamil  |  First Published Jun 14, 2024, 9:30 PM IST

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் கூட முன்னாள் காதலனின் நினைவால் அல்லாடும் ஒரு பெண்ணின் அனுபவம்...


தாம்பத்திய வாழ்வில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைப்பதில்லை. சிலருக்கு பிடித்தமாதிரி வாழ்க்கை அமையும். சிலருக்கு அமைந்த வாழ்க்கையே பிடித்து போகும். சிலருக்கு வாழ்வின் கடைசி மூச்சு வரை தாம்பத்தியம் மகிழ்ச்சியை கொடுத்திருக்காது. சிலருக்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கும் ஆனால் வாழ தெரியாது. இங்கு அப்படியொரு பெண்ணின் அனுபவத்தை காண்போம். 

தன்னுடைய கணவனை மிகவும் பிடித்திருந்தாலும், முன்னாள் காதலனுடனான கற்பனைகளால் குழம்பித் தவிக்கும் பெண் அவள். இதனால் குற்றவுணர்ச்சி ஏற்பட்டாலும், காதலனின் கனவு சிறைக்குள் இருந்து வெளிவர அவளால் முடியவில்லை. "என்னுடைய கணவன் எனக்கு எல்லா விதத்திலும் இணக்கமாக இருந்தாலும், ஏதோ ஒரு வெறுமை துரத்துகிறது. என் முன்னாள் காதலனுடனான கற்பனைகளை நிறுத்த முடியவில்லை" என அந்த பெண் கூறுகிறார். 

Tap to resize

Latest Videos

இப்படி ஒரு பெண் நினைக்க என்னவெல்லாம் காரணம் இருக்கும்? தற்போதைய மண வாழ்வில் திருப்தியின்மை முதன்மை காரணமாக இருக்கும். பொதுவாக ஒரு உறவு அக்கறை, அன்பு, காதல், காமம் இப்படி எல்லாம் கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு தாம்பத்திய வாழ்வில் கிடைக்கவேண்டிய விஷயங்களில் ஏதேனும் சிலவற்றை அவள் இழந்தாலும் ஏங்க தொடங்கிவிடுகிறாள். அவள் கணவனின் மீது வரும் அதிருப்தி கற்பனைகளில் அவளை மூழ்க செய்கிறது. கணவன் தன்னை கவனிக்க வேண்டும், அவ்வப்போது பாராட்ட வேண்டும், அன்பாக இருக்க வேண்டும் என்பது அவளின் நியாயமான எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க:  Relationship Tips : இந்த குணம் உள்ளவர்களிடம் காதல், டேட்டிங் என்று மாட்டிக்காதீங்க.. அவ்ளோதா சொல்லுவ..!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெண், தன் கணவன் மீது குறைகள் ஏதும் சொல்லவில்லை. அதிலிருந்து பார்த்தால் இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல உரையாடல் இல்லாதது தான் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனைகள் அல்ல, சின்ன சின்ன எதிர்பார்ப்புகளால் தான் மண வாழ்க்கை விவாகரத்து வரை செல்கிறது. இருவரும் அமர்ந்து மனம் விட்டு பேசினால் நல்ல முடிவு எடுக்க முடியும். நம்முடைய அதிருப்தியை கணவனிடமோ மனைவியிடமோ பகிர்ந்து கொள்ளாமல் இருவரின் தேவைகளும் நிறைவேறாது. எந்த வித முன்முடிவுகளும் இல்லாமல் மனம் விட்டு பேசி ஒருவர் ஆசையை ஒருவர் நிறைவேற்ற முயன்றால் அந்த உறவில் பிரிவே இல்லை. வெறும் வார்த்தைகள் அல்ல உங்கள் செயல் தான் இணையுடன் நெருக்கத்தை உண்டாக்கும். 

இதையும் படிங்க:  Relationship Tips : உறவில் தூரம் வந்துட்டா..? இந்த வழியில் கரெக்ட் பண்ணுங்க.. வொர்கவுட் ஆகும்!

குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்பட இருவர் தரப்பில் இருந்தும் அவ்வப்போது புதுமையான விஷயங்களை செய்ய வேண்டும். பரிசுகள் கொடுப்பது, இரவில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது, தினமும் முத்தம் கொடுத்து கொள்வது போன்ற விஷயங்கள் பார்க்க சாதாரணமாக தோன்றினாலும் இதனால் ஏற்படும் பலன்கள் அதிகம். இந்த சின்ன காதல் சீண்டல்கள் தன் கணவனிடம் கிடைக்காமல் கூட அவர் தன் முன்னாள் காதலனை நினைத்து கொண்டிருக்கலாம். 

காதல் காலத்தில் ஒருவரை ஒருவர் கவர அடிக்கடி ஏதேனும் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணத்தில் நம் கணவன் தானே/ நம் மனைவி தானே என்ற அலட்சிய போக்கு வந்துவிடும். அப்படி இருக்காமல் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி ஆசைகளை நிறைவேற்றி கொள்வதால் மூன்றாவதாக ஒருவர் உங்கள் உறவில் தலையிடமாட்டார்கள். நலம் வாழுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!