இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் 40 வயதுகளில் விவாகரத்து செய்வது இயல்பாகி வருகிறது. இது பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பேரிடியாக விழுகிறது. அப்படி விவாகரத்து ஆனவர்கள் செய்ய வேண்டியவற்றை இங்கு காணலாம்.
ஒரு மனிதனுக்கு அவருடைய 40 வயதில் குடும்பம், வேலையில் முன்னேற்றம், நிதித் தேவைகளை எட்டுவது என முக்கியமான காலகட்டம். வாழ்வின் இந்த சந்தர்ப்பத்தில் சில தனித்துவமான சிக்கல்களையும் அவன் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனாலும் சரியான முறையில் இந்த சூழ்நிலையை கையாண்டால் உங்கள் 40 வயது என்பது உணர்வுப்பூர்வமாக அமையும். இங்கு 40 வயதில் செய்ய வேண்டிய சில விஷயங்களை காணலாம்.
நீங்கள் மதிப்பு மிக்கவர்கள்: பல திருமணங்களில், பெண்களுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை உங்களுக்கு நாற்பது வயதில் விவாகரத்து ஆகும் சூழல் அல்லது நீங்கள் விவாகரத்து ஆனவராக இருந்தாலும் சில விஷயங்களில் தெளிவாக இருங்கள். உங்களுக்கு இருக்கும் திறமை, லட்சியம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த காரியங்களை செய்வதில் முனைப்பாக இருங்கள். நீங்கள் விவாகரத்து செய்தாலும் மதிப்பு மிக்கவர்கள்தான். உங்களை குறை சொல்பவர்களிடம் மன்னிப்பு கேட்காமல் உங்கள் மதிப்புக்காக செயலாற்றுங்கள். நீங்கள் யார் என்பதை முழுவதுமாக நீங்கள் உணர்ந்து இருக்க வேண்டும்.
சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளுதல்: நம் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மற்றவர்களின் செயல்களை மாற்றுவதும் நமக்கு சாத்தியமான காரியம் அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். நாம் நினைத்த மாதிரி வாழ்வை மாற்றுவதை விட வாழ்வை அதன் போக்கில் வாழ்வது சுலபம். வாழ்க்கை எவ்வளவு கடினமான சூழ்நிலைகளை உங்களுக்கு அளித்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.
இதையும் படிங்க: நீங்கள் புதிதாக காதலிக்கும் நபரா..? இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லையெனில் உறவு முறிந்துவிடும்!
சவால்களை எதிர்கொள்ளுங்கள்: உங்கள் கடந்த காலத்தை நினைத்து உங்களை நீங்களே துன்புறுத்த வேண்டாம். கடந்தகால பாடம் உங்களை ஆன்மீக வழியில் ஸ்திரப்படுத்தும். திறந்த மனப்பான்மையுடன் எப்போதும் நிகழ்காலத்தில் வாழுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள்.
சுதந்திரமாக இருங்கள்: தனிமையின் வலியை ஏற்று கொள்ளுங்கள். அது கொடுக்கும் சுதந்திரத்தை அனுபவியுங்கள். வேறு யாருக்காவும் இல்லாமல் உங்களுக்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே அறிய இந்த நேரத்தை பயன்படுத்துங்கள்.
குழந்தைகள்: உங்களுக்கு குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கைக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தனிமனிதராக ஆனாலும் உங்களுடைய வாரிசுகள் மனநலனில் எந்த பிசகும் இல்லாமல் விவாகரத்தை கையாளுங்கள். உங்களுடைய சண்டையோ, பிரிவோ அவர்களின் மனநலனை சிதைக்கக் கூடாது.
இதையும் படிங்க: கணவன்-மனைவிக்குள் எவ்வளவு சண்டை வந்தாலும் உறவு வலுவாக வைக்க சில டிப்ஸ்!
கனிவு காட்டுங்கள்: உங்களுக்கு நீங்களே கனிவு காட்டுங்கள். உங்கள் முன்னாள் கணவன்/ மனைவியிடமிருந்து நீங்கள் பிரிவது போலவே, இந்த பொது சமூகத்தின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் கருத்துகள், குடும்பத்தினர் கோபம் ஆகியவற்றில் இருந்து உங்களை விலக்கி கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு என்ன நடக்கிறதோ அதை கனிவுடன் கவனியுங்கள்.
உங்களிடம் இழக்க எதுவுமே இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள்? புதிய வாழ்க்கையை அமைத்து உங்கள் கனவுகளை நோக்கி பயணப்படுங்கள்.
நிதி தேவைகளை சீரமைத்தல்: பொதுவாக விவாகரத்து ஆண் மற்றும் பெண் இருவருக்கும் அவர்களின் நாற்பது வயதுகளில் ஏற்படுவது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். சிலரின் சொத்துகள் பிரியும். அதனால் திட்டமிட்டு நிதியை கையாளுங்கள். உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் இரண்டாவது வாய்ப்பில் உங்கள் லட்சியம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக நேரம் செலவிடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D