Radhika Merchant Dress : சொகுசு கப்பலில் நடந்த அனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் அவர் அணிந்திருந்த ஆடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ஜென்ட் ஆகிய இருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது. மேலும் அவர்களது திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி மும்பையில் வெகு பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன்னதான நிகழ்வுகள் வெகு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்க ஐரோப்பா நாட்டின் கடல் பகுதியில் 3 நாள் பயணமாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மச்சானின் திருமணத்திற்கு முன்னதாக நிகழ்வுகள் சொகுசு கப்பலில் நடைபெற்றது. பிரபல கிரிக்கெட் வீரர் தோனி கூட இந்த விருந்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் அந்த சொகுசு கப்பலில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களில் ஒரு முக்கியமான தொகுப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. அனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகிய இருவரும் கடந்து சில ஆண்டுகளாக காதல் வயப்பட்டது இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தன்னுடைய பிறந்த நாள் ஒன்றுக்கு அனந்த, தனக்கு நீண்ட நெடிய காதல் கடிதம் ஒன்றை எழுதியதாக கூறியுள்ளார் ராதிகா.
மேலும் அந்த காதல் கடிதத்தை தனது வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல ஆசைப்பட்டு அதை ஒரு ஆடையாக வடிவமைக்க முடிவு செய்திருக்கிறார். அதனை எடுத்து லண்டன் நகரை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் ஊண் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு கவுனில் ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் ராதிகாவிற்கு எழுதிய அந்த காதல் கடிதத்தை அச்சிட்டு வழங்கி உள்ளார் ராபர்ட்.
இதுகுறித்து வெளியான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த உடையின் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வருகின்ற ஜூலை 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வெர்ஷன் சென்டரில் அவர்களுடைய திருமணம் நடக்க உள்ளது.
ஆண்களிடம் இந்த 3 விஷயங்கள் இருந்தால் எச்சரிக்கையா இருங்க.. ரஜினி பட நடிகை கொடுத்த செம அட்வைஸ்..