Latest Videos

காலை டிபனுக்கு தினையில் சுவையான சத்தான தோசை சுட்டு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Jun 13, 2024, 7:30 AM IST
Highlights

இந்த பதிவில் சிறு தினை தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே, ஒவ்வொரு வீடுகளிலும் காலை இரவு உணவாக இட்லி தோசை தான் இருக்கும். ஏனெனில், எந்தவித கடினமுமின்றி, மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி எதுவென்றால் அது இட்லி தோசை தான். மேலும், இபை இரண்டு. தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது.

அந்தவகையில், இன்று உங்கள் வீட்டில் காலை உணவாக தோசை சுட போறீங்களா..? எப்போதும் போல் தோசை சுடுவதற்கு பதிலாக ஆரோக்கியமாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கக்கூடிய சிறு தினை தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசையை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த தோசைக்கான மாவை தயார் செய்வது மிகவும் சுலபம். சரி வாங்க இப்போது இந்த பதிவில் சிறு தினை தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்குப் பிடித்த பூரி! ரவையில் ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தினை தோசை செய்ய தேவையான பொருட்கள்: 
சிறு தினை - ஒரு கப்
முழு பச்சை பயிர் - அரை கப்
இஞ்சி - ஒரு துண்டு
வெந்தயம் - இரண்டு ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

இதையும் படிங்க:  2 கப் கோதுமை இருக்கா? குட்டீஸ்க்கு பிடித்தமான பாஸ்தா செஞ்சு கொடுங்க .. தட்டு காலியாகும்!

சிறு தினை தோசை செய்முறை: 
சிறு தினை தோசை செய்ய முதலில், எடுத்து வைத்த சிறு தினை மற்றும் பாசி பயிரை நன்கு கழுவி குறைந்தது 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதனுடன் எடுத்து வைத்த வெந்தயத்தையும் கழுவி ஊற வையுங்கள்.

இவை அனைத்தும் நன்கு ஊறிய பிறகு, இதனுடன் எடுத்து வைத்த இஞ்சியையும் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த அந்த மாவை குளிக்க வைப்பதற்காக குறைந்தது 7 மணி நேரம் மூடியே வையுங்கள். மாவு நன்றாக புளித்ததும் இப்போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் இப்போது சிறு தினை தோசை செய்வதற்கான மாவு தயார்.

இதனை அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை தடவுங்கள் பிறகு அதில் கலக்கி வைத்த மாவை வட்டமாக ஊற்றுங்கள். பின் தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றுங்கள். அப்போதுதான் தோசை நன்றாக வேகம். இப்போது தோசையை இரண்டு பக்கமாக நன்கு பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் சிறு தினை தோசை ரெடி!!! இந்த தோசைக்கு நீங்கள் காரமான சட்னி, தக்காளி சட்னி தேங்காய் சட்னி ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம் (அ) இட்லி பொடி வைத்து சாப்பிடலாம்.

அதுமட்டுமின்றி இந்த தோசை மாவில் நீங்கள் எல்லா வகையான காய்கறிகளையும் பொடியாக நறுக்கி அதில் கலந்து பிறகு தோசை சுட்டால் காய்கறி தோசை தயார்..

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!