Latest Videos

காலையில சத்தான உணவு சாப்பிட விரும்பினால் ராகி மாவில் இந்த டிபன் செய்ங்க... டேஸ்டா இருக்கும்!

By Kalai SelviFirst Published Jun 12, 2024, 7:30 AM IST
Highlights

இந்த பதிவில் சத்தான ராகி உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தினமும் காலை உங்கள் வீட்டில் இட்லி தோசை தான் செய்து சாப்பிடுகிறீர்களா..? அப்படி சாப்பிட்டு உங்கள் போரடித்தால், உங்களுக்கான ஒரு புது ரெசிபி கொண்டு வந்துள்ளோம்.  அது வேற எதுவும் இல்லங்க உப்புமா தான். என்ன உப்புமாவா என்று முகம் சுழிக்கிறீங்களா..? பொதுவாகவே, உப்புமா என்றாலே பலருக்கு முகம் சுழியும். ஆனால், ஆனால் இது எப்போதும் சாப்பிடும் வெறும் உப்புமா இல்லங்க. ஆரோக்கியமான ராகி உப்புமா தான். இந்த உப்புமா சாப்பிடுவதற்கு சுவையாகவும்  இருக்கும். முக்கியமாக இந்த உப்புமா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.

பொதுவாகவே, ராகி மாவில் களி, கூழ் என்று தான் நீங்கள் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். உப்புமா செய்து சாப்பிடவில்லை என்றால், ஒருமுறை கண்டிப்பாக இந்த ராகி உப்புமா செய்து சப்பிடுங்கள். இன்று காலை உங்கள் வீட்டில் இந்த ராகி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ராகி உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  உங்க வீட்ல சுரைக்காய் இருந்தா ஒன் டைம் சப்பாத்தி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல் இருக்கும்!

ராகி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
ராகி மாவு - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன் 
முந்திரி - 10
இஞ்சி - சின்ன துண்டு
பச்சை மிளகாய் - 1 
பெரிய வெங்காயம் - 1
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  Ulutham Paal : தினமும் இந்த பால் குடிங்க.. முதுகு வலி, இடுப்பு வலிக்கு குட் பை சொல்லுங்க..

செய்முறை:
ராகி உப்புமா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்கு சூடானதும், அதில் எடுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

அவை நன்கு வதங்கிய பிறகு இப்போது அதில் எடுத்து வைத்த பெருங்காயத்தூளை லேசாக சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் உங்கள் சுவைக்கேற்ப முப்பையும் சேர்க்கவும்.வெங்காயம் நன்கு வெந்ததும் அதில் எடுத்து வைத்த ரவையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். ரவை நன்கு வதங்கியதும் அதில் எடுத்து வைத்த ராகி மாவையும் சேர்த்து கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதில் எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறி விடுங்கள். ராகி மாவு நன்கு வேக பாத்திரத்தை ஒரு மூடி போட்டு மூடி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து உப்புமாவை நன்கு கிளறி விடுங்கள். பிறகு மீண்டும் மூடி வைத்துவிட்டு. மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் இப்போது சத்தான ராகி உப்புமா ரெடி!!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!