சுவையான மீன் பிரியாணி எளிமையான முறையில் எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
பிரியாணி என்றாலே யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். பிரியாணி பிடிக்காது என்று சொல்லுபவர்களை பார்ப்பது அரிதான விஷயம். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு எதுவென்றால் அது பிரியாணி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இதுதான். மூன்று வேளையில் பிரியாணி கொடுத்தாலும் அதை சலிக்காமல் சாப்பிடுபவர்கள் நம்மில் பலர் உண்டு.
இதுவரை நீங்கள் எத்தனையோ பிரியாணி ரெசிபிகளை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை செய்திருக்கிறீர்களா? ஒருவேளை அப்படி இல்லை என்றால் சுவையான மீன் பிரியாணி எளிமையான முறையில் எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!
மீன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
மீன் - 1 கிலோ
அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 1
ஏலக்காய் - 4
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கொத்தமல்லி இலைகள் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: ராஜ்மாவில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!
செய்முறை:
மீன் பிரியாணி செய்ய முதலில், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீனை நன்கு சுத்தம் செய்து சரியான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் எடுத்து வைத்த சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு, கரம் மசாலா, கொத்தமல்லி பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு எடுத்து வைத்த அதில் தயிர், உங்கள் சுவைகேற்ப உப்பு, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 7 நிமிடங்களுக்கு வதக்கவும். இப்போது இதனுடன், நறுக்கி வைத்த மீன் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வையுங்கள். மீன் நன்கு வெந்ததும், கடாயை அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.
இதனை அடுத்து, பிரியாணி செய்வதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் எடுத்து வைத்த கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு கழுவி வைத்த அரிசியையும் அதில் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். இப்போது, இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து விட்டு, 3 விசில் விட்டு சாதத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.
அதன் பிறகு ஏற்கனவே, தயாரித்து வைத்த மீன மசாலாவை பிரியாணி சாதத்துடன் சேர்த்து கொள்ளுங்கள். பின் இதன் மீது கொத்தமல்லியை தூவி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான மீன் பிரியாணி ரெடி.!!!
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D