இந்திய திருமணங்களில் பிராந்திய உணவுகள் ஏன் முக்கியம்? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

By Ramya s  |  First Published Dec 7, 2024, 3:40 PM IST

இந்திய திருமணங்களில் உணவு என்பது விருந்தோம்பலின் அடையாளமாகவும், கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகவும் விளங்குகிறது. 


இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்களை பின்பற்றும் ஒரு நாடு. எனவே இந்திய திருமணங்களில் கலாச்சாரம், பாரம்பரியம் அதிகளவு நிறைந்திருப்பது எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்தியாவில் திருமணங்கள் என்பது வண்ணம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் ஆடம்பரமான கொண்டாட்டமாகவும் நடைபெறுகிறது. சில திருமணங்கள் சடங்குகள் மற்றும் விழாக்கள் காரணமாக. சில திருமனங்கள் பல நாட்கள் நடைபெறுகின்றன. எனினும், எந்தவொரு திருமணத்திற்கும் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று நல்ல உணவு.

இந்திய கலாச்சாரத்தில், உணவு விருந்தோம்பலின் முக்கிய அங்கமாகும். இது மக்களை வாழ்த்துவதற்கும் அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட திருமண மெனு குடும்பங்களை ஒன்றிணைக்கக்கூடும், மேலும் உணவைப் பகிர்ந்துகொள்வது மக்கள் ஒருவரையொருவர் பிணைக்கவும் இணைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ரத்தன் டாடாவின் இளம் மேலாளர் சாந்தனு நாயுடுவின் லேட்டஸ்ட் பதிவு வைரல்! அது என்ன தெரியுமா?

இந்தியா பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்ட ஒரு மாறுபட்ட நாடு, இது அதன் திருமண உணவுகளில் பிரதிபலிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி சுவைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன. நீங்கள் வட இந்திய திருமணத்தில் கலந்து கொண்டால், கத்தாய் பனீர், தால் மக்னி, ஷாஹி பனீர் மற்றும் பிற உணவு வகைகளைக் காணலாம், அதே சமயம் நீங்கள் தென்னிந்தியாவை பொறுத்தவரை,  சாதம், ரசம் மற்றும் சாம்பார் போன்ற சுவையான உணவுகளை நீங்கள் காணலாம். .

undefined

எந்தவொரு இந்திய திருமணத்திலும் பிராந்திய உணவுகள் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் அவை கலாச்சார பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கின்றன,  மேலும் விருந்தோம்பலை முன்னிலைப்படுத்துகின்றன. மேலும், இது நாட்டின்  மாறுபட்ட சமையல் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது..

திருமணங்களில் பிராந்திய உணவுகள் ஏன் முக்கியம்?

இந்திய திருமணங்களில் உணவு என்பது குறியீடாகும், ஒவ்வொரு உணவும் தனித்துவமான ஒன்றைக் குறிக்கிறது. பிரியாணி ஒற்றுமையை குறிக்கிறது. மேலும் ஹல்வா மற்றும் கீர் போன்ற இனிப்புகள் ஒரு அழகான திருமண வாழ்க்கையை இனிமையான தொடக்கத்தை குறிக்கின்றன்.

சடங்குகள்: இந்திய திருமண சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பழங்கள் போன்றவை குடும்பங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் பரிசாக வழங்கப்படுகின்றன.

குடும்பப் பிணைப்பு: இரண்டு தனிநபர்களின் சங்கமத்தைக் கொண்டாட உணவு குடும்பங்களை ஒன்றிணைக்கிறது. திருமண விருந்து குடும்பங்கள் தங்கள் விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

கலாச்சார பாரம்பரியம்: திருமண நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் உணவுகள் பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும்.

கோடீஸ்வரர்கள் வசிக்கும் டெல்லியின் ஆடம்பர சொகுசு பங்களாக்கள்; தலை சுற்ற வைக்கும் விலை!

வட இந்தியா : வட இந்திய உணவு வலுவான முகலாய செல்வாக்கைக் காட்டுகிறது. வட இந்திய திருமணங்களில் பால் பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். பால், பனீர், நெய் மற்றும் தயிர் இவை அனைத்தும் பொதுவாக வட நாட்டு சமையல்களில் பயன்படுத்தப்படுகின்றன.ஷாஹி பனீர், சோல், மிக்ஸ் வெஜிடபிள், கதி ரைஸ், தால் மக்னி  உள்ளிட்ட உணவுகள் வட இந்தியாவின் பிரபலமான உணவுகளில் அடங்கும்.

தென்னிந்தியா : தென்னிந்திய திருமணங்களில், அரிசி, தேங்காய் மற்றும் உள்நாட்டில் விளையும் பொருட்களை  வைக்கப்படும் சமைக்கப்படும் விருந்து பரிமாறப்படுகிறது. வாழை இலை சாப்பாடு தென்னிந்திய திருமணத்தில் மிகவும் பிரபலமான உணவாகும். சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், வடை, பாயாசம் என விருந்து பரிமாறப்படுகிறது.

மேற்கு இந்தியா : மேற்கு இந்தியாவின் திருமணங்கள், குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி திருமணம், உந்தியு, டோக்லா, சபுடானா கிச்டி, செவ் தமதா, குஜராத்தி கதி, சனா பட்டாடா, தால் பாத்தி சுர்மா, கெவர், ஷாஹி கேட்டே, மேத்தி ஆலு, பெஜாட் ரொட்டி மற்றும் பிற சைவ உணவுகளுக்காக பிரபலமானது. .

கிழக்கு இந்தியா பெங்காலி திருமண உணவு பொதுவாக சைவ மற்றும் அசைவ விருப்பங்களின் கலவையாகும், இதில் மிருதுவான காய்கறி பக்கோரா, காரமான அலூர் டம், குச்சி நார்கோலுடன் சோளார் டால், மிளகாய் புல்கோபி, மீன் மற்றும் இறைச்சி உணவுகள், மட்டன் பிரியாணி மற்றும் பிற அடங்கும். அசாமிய திருமணங்கள், மறுபுறம், கருப்பு எள்ளுடன் சிக்கன் மற்றும் மற்றவற்றுடன் பட்டோட் தியா மாஸ் ஆகியவை அடங்கும்.

click me!