
ஆண்மைக் குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. ரத்தத்துக்கு நன்மை செய்யும், எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறையவும், தினமும் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும்.
நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன;இவை, தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, செரிமானத்தை அதிகப்படுத்தும்.
இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நிரிழிவு பாதாமில், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால்,இருதயத்துக்கு நல்லது.
பாதாம் பருப்பை, குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். நன்றாக மென்று விழுங்கும் போது, எளிதில் ஜீரணமாகும்.
பாதாம் எண்ணெயில், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் நிறைந்திருக்கிறது; எல்லாவித சருமத்துக்கும் உகந்தது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை, பாதாம் எண்ணெய் குணப்படுத்தும்.
பாதாம் பால், வயிறு, சிறுநீரகப் பாதை, நுரையீரலுக்கு நல்லது. வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில், பாதாம் ஒரு முக்கியமான டானிக்.
ஆண்மைக் குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு.
அதனால், பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.