
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
’பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும். அமிலம்,
காரம் நிறைந்த உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், செரிமானத்துக்கு சிரமமானவை, கோலா பானங்கள், செயற்கை பழரச பானங்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உறங்கும்போது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையும், வயிற்றின் அடிப்புறம் ஒரு தலையணையும் வைத்துக்கொள்ளலாம். பிரசவ காலத்துக்கு என சிறப்பான தலையணைகள், படுக்கைகள் சந்தையில் உள்ளன.
அவற்றையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால் நீங்களாக சுயவைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.’
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.