என்னது சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் சாப்பிடக்கூடாதா?

 
Published : Jun 06, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
என்னது சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் சாப்பிடக்கூடாதா?

சுருக்கம்

The diet control for diabetes patient

சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து  சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம் உணவின் சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்கப்பட்டு தேவையான இன்சுலினை பெற்று உடலால்ஏற்றுக்கொள்ளப்படும்.தவறான உணவுப்பழக்கத்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.   அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து  (fibre content)  சக்கரையின் அளவு  இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.

சாப்பிட வேண்டியவை

 காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. 

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

 வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.



மேலும்:கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி, புடலங்காய், பலாக்காய்,காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்சாப்பிட வேண்டிய பழங்கள் :

ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம்.
அருந்த வேண்டிய பானங்கள் :

 சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா.

சாப்பிடக்கூடாதவை:
 வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதையும்  தவிர்க்கவேண்டும்


சாப்பிடக்கூடாத பழங்கள் :

பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள்,பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா., சீத்தா  போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  
அருந்தக் கூடாத பானங்கள் :

 சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு,வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்