ஓட்டலில் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? ஜாக்கிரதை!!

 
Published : Jun 06, 2017, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஓட்டலில் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? ஜாக்கிரதை!!

சுருக்கம்

Are you eating most time hotel foods

உடல் சூடு அதிகம் உள்ளோருக்கு, வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சூடு மேலும் அதிகரிக்கும். இதனால்,வயிறு இழுத்து பிடித்தல், அடிவயிறு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், எரிச்சல், சிவந்து போதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். 

அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்னை வருகிறது. நீரிழப்பு ஏற்படும் போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராதவர்களுக்கு கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும். 

நீர் சத்து குறைவதால் குறு மயக்கம் மற்றும் ஆழ்நிலை மயக்கம்,     வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சிறுநீரை அடக்கி வைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி, தொற்று ஏற்பட்டு சிறுநீர் பாதையில் அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. நீர்ச்சத்து, உடலில் சரியான அளவில் இருந்தால் தான், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது, 'சன் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது. 



ஓட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு, வெப்ப சூழலில் அடிக்கடி உணவு நஞ்சாகும் வாய்ப்புகள் அதிகம். அதனால், வயிற்றுப் போக்கால் அதிகம் 
அவதிப்பட நேரிடும். இதோடு கோடைக் காலத்தில் அந்த காய்ச்சலின் தாக்கம், அதிகமாக இருக்கும். தண்ணீர் மூலம் பரவும் நோய் என்பதால், சற்று தீவிரமாக இருக்கும். அதற்கு வெளி உணவுகளை உண்ணாமல், வீட்டில் தயாரித்த உணவுகளை உண்டாலே போதும். சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றை தவிர்த்தாலே அந்த காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

ஆரோக்கியமா உணவு எடுத்துக்கொள்வதோடு தண்ணீர்,  உணவு எடுத்துக்கொள்வதோடு தண்ணீர், சூப், பழச்சாறு, மோர், இளநீர், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்,பழங்களை அதிகமாக                  சாப்பிடலாம். முக்கியமாக தர்பூசணி, தக்காளி,        எலுமிச்சை சாறுகள் அதிகமாக குடிக்கலாம். வாரம் இருமுறை, எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளலாம்.

கோடைக் காலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது; ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தவும் கூடாது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். 'டின்'களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.


வெளியில் செல்லும்முன், 'சன்ஸ் கிரீம் லோஷனை,' அரைமணி நேரத்திற்கு முன்பே தடவி செல்லுங்கள். புறப்படும் நேரத்தில், தடவி சென்றால் அது பயனளிக்காது. கண்டிப்பாக கைப்பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். கையில் எந்த நேரமும் குடை இருக்கட்டும். கூடுமான வரை, மாலையில் வெளியில் செல்வதாக இருந்தால், மிகவும் நல்லது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்