
எலுமிச்சையை, தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தும் போது அதுவும்கூட சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எலுமிச்சையை, அதிக அளவு நன்மை தரக்கூடிய பக்க விளைவுகள் இல்லாத, ஒன்று என்று தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தும் போது அதுவும்கூட சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
சாதாரணமாக, எண்ணெய் பசையுள்ள சருமத்துக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தும் போது அது சருமத்திலுள்ள எண்ணெய் பசையைப் போக்கும். ஆனால், வறட்சியான, அல்லது எண்ணெய்ப்பசை குறைவாக உள்ள சருமத்தில் எலுமிச்சை சாறு தடவும்போது, அது சருமத்தை மேலும் வறட்சியாக மாற்றிவிடும்.
எலுமிச்சை சாறு வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். அதேசமயம், மிக அதிகமாக எலுமிச்சை சாறு குடிக்கும்போது, அதிலுள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
எலுமிச்சை மலச்சிக்கலைப் போக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைப் பருகினால் அது வயிறை மந்தமாக்கும். வயிற்றில் எரிச்சலை உண்டாக்கிவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.