நம்முடைய வாழ்கையில் எது இருக்கோ இல்லையோ நாலு நண்பர்கள் மட்டும் இல்லாமல் இருக்க மாட்டார்கள் . அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. அனைவருக்குமே தேவையானவர்கள் தான் நண்பர்கள்ஏனென்றால் இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி எப்பொழுதும் நம்முடன் இருப்பவர்கள் தான் நம் நண்பர்கள்அந்த வகையில் நண்பர்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என நம் மனதில் ஒரு முத்திரை குற்றி வைத்திருப்போம் அல்லவா...அதனை இப்போது பாப்போம்நண்பர் என்றால் இந்த தகுதி கட்டாயம் இருக்கும்ஒரு திட்டம் போட்டு , அந்த திட்டத்தை கடைசி நேரத்தில் சொதப்பி செய்ய முடியாமல் போனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை நண்பருக்கு மட்டுமே உண்டு. ஓகே விடு பாத்துக்கலாம்-னு கூலாக சொல்வார்கள் பாருங்கள் . இதனை நம் குடும்ப உறுப்பினரிடம் எதிர்பார்க்க முடியாதுநம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் வைக்க மாட்டார்கள். எனக்கு இது வேணும் இப்படி தான் வேணும் என கேட்டு நிர்பந்தம் செய்ய மாட்டார்கள்தெரிந்தோ தெரியாமலோ நாம் செல்லக் கூடிய பாதை தவறாக இருந்தால், அதனை மாற்றி நல்வழியில் நடத்த உறுதுணையாக இருப்பது நம் நண்பர்கள் தான்எப்பொழுதும் தனிமை என்ற ஒரு விஷயம் நாம் அனுபவித்தே இருக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக நம்மை வைத்துக்கொள்பவர்கள் நம் நண்பர்கள் தான்நண்பர்கள் ஒன்றாக இருந்தாலும், வெவ்வேறு இடத்தில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.ஒரு வேளை நம் நண்பருக்கு நல்ல வேலை கிடைத்தால் அதை நினைத்து பொறாமை படுபவர்கள் இல்லை நம் நண்பர்கள்நண்பனுக்கு எதாவது பிரச்னை ஏற்பட்டு சோகத்தில் இருந்தால், அந்த சோகம் முழுமையாக மறையும் வரை கூடவே இருப்பது நம் நண்பர்கள் தான்