திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற பழமொழி கேள்விபட்டிருப்போம். அதுபோன்ற திருமண வாழ்க்கை என்பது முன்பொரு காலத்தில் தான் இருந்துள்ளது.தற்போதுள்ள வாழ்க்கை முறையில் திருமண வாழ்க்கை என்பது சில நாட்களிலேயே கசப்பாக மாறி விடுகிறது. அதன் காரணமாகத்தான் , காரணம் கூட சரியாக கூற முடியாமல் டைவர்ஸ் வரைக்கும் சென்று விடுகிறார்கள்டைவர்ஸ் சரிதான்.ஆனால் அதற்கு முன்னதாக தாம்பத்யம் என்ற ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் பெறப்படும் குழந்தை என்ன செய்தது?சில பல காரணங்களால் கணவரை விட்டு மனைவி பிரிந்தாலும், மனைவியை விட்டு கணவர் பிரிந்தாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் யார் என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.நீங்கள் பெற்ற குழந்தைக்கு பெற்றோர்கள் வேண்டுமா ? தாய் மட்டும் போதுமா? தந்தையிடம் அந்த குழந்தை வளருமா வன்பதை எல்லாம் யோசிக்காமல், சுய நலத்திற்காக மனைவி ,குழந்தையை விட்டு விட்டு கணவர் ஓடி போவதும், இதே போன்று கணவர் மற்றும் குழந்தையை விட்டு மனைவி எங்கோ சென்று விடுவதும் ஒரு சுயநலமாகத்தான் பார்க்கப்படுகிறது.இதெற்கெல்லாம் உதாரணமாக நாம் ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருகின்றோம்பெங்களுரில் ஜே.பி நகரில் வசித்து வருபவர் சுவாதி சர்கரின் 9 வயது மகள் ஆசிகா சர்கர். இவருடைய தாய் சுவாதி முன்னாள் ஆசிரியை என்றும், ஆசிகாவுக்கு சமீபத்தில் தான் பேச்சு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுவாதியின் கணவர் கஞ்சன் சர்கர், இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.தனியாக தன் 9 வயது குழந்தையை வளர்த்து வந்த சுவாதி, தன் கணவரை பற்றியே நினைத்து வந்துள்ளார். மேலும் இவருடைய வாழ்க்கை பற்றியும் தன்னுடைய கணவர் இல்லாமல் மகளை எப்படி வளர்க்க முடியும் என நினைத்து நினைத்து மன வேதனை அடைந்துள்ளார்.பின்னர் ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தது போல் திரிந்த சுவாதி, தான் பெற்றெடுத்து வளர்த்த குழந்தையை 4 ஆவது மாடியிலிருந்து தூக்கி எரிந்து கொன்றுள்ளார்.இந்த சம்பவம் அறிந்தவர்கள் அந்த தாயை பிடித்து, கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தி புரிகிறதா ? நாம் யார்?நம் குடும்பம் என்ன ? எது முக்கியம் ? எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் ? இன்னும் பல கேள்விகளுக்கு பதில் அந்த குழந்தையின் இறப்பில் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்