சென்னை விமான நிலையத்தில் "5 சினிமா தியேட்டர்"...! பிளைட் வர நேரத்திற்குள் படம் பார்க்கலாம்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 22, 2020, 12:25 PM IST
சென்னை விமான நிலையத்தில் "5 சினிமா தியேட்டர்"...! பிளைட் வர நேரத்திற்குள் படம் பார்க்கலாம்..!

சுருக்கம்

15 கோடி செல்வதில் தியேட்டர் அமைக்க பட உள்ளது என்றும் கூடுதலாக புட் கோர்ட் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 80 சதவீத மக்கள் வெளியிலிருந்தும், 20 சதவீத மக்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் "5 சினிமா தியேட்டர்"...! பிளைட் வர நேரத்திற்குள் படம் பார்க்கலாம்..! 

விமான நிலையத்தில் பயணிகள் நேரத்தை ஜாலியாக கழிக்க 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் பணியில் இறங்கி உள்ளது பிரபல தனியார் நிறுவனமான பி.வி.ஆர் நிறுவனம். 

அப்போது இந்த நிறுவனத்திற்கு மட்டும் 50 நகரங்களில் 584 திரைகளை கொண்டுள்ளது. இந்த  நிலையில் 2000 திரைகளை அடுத்த ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதிகளுடன் செய்ய சர்வதேச அளவில் தரமாக அமைக்க உள்ளது. இது குறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி கருத்து தெரிவித்து உள்ளார்.

தங்கம் விலை குறைவு..! இன்றைய சவரன் விலை இவ்வளவு தான்..!

15 கோடி செல்வதில் தியேட்டர் அமைக்க பட உள்ளது என்றும் கூடுதலாக புட் கோர்ட்  அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 80 சதவீத மக்கள் வெளியிலிருந்தும், 20 சதவீத மக்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.
 
மேலும், விமான நிலையத்தில் திரை அரங்கு வைக்கப்பட்டால் கண்டிப்பாக மக்களுக்கு மிக சிறந்த பொழுதுபோக்காக அமைந்து விடும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்