
தங்கம் விலை குறைவு..! இன்றைய சவரன் விலை இவ்வளவு தான்..!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.13 குறைந்து 3802.00 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிராமுக்கு ரூ.13 குறைந்து 3802.00 ரூபாயாகவும், சவரனுக்கு104 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 80 பைசா குறைந்து 49.80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.