அதிரடி திருப்பம்... எலிகளை வைச்சு சோதிச்சாச்சு... கொரோனா வைரசை விரட்ட புதிய சிகிச்சை முறை ரெடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 6, 2021, 11:02 AM IST
Highlights

கொரோனா தொற்று பரவ தொடங்கிய பிறகு, இந்த வைரசுக்கு எதிராக இந்த தடுப்பானும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது பலரும் இதை ஒரு சிகிச்சையாக தொடர்கின்றனர். 
 

கொரோனா வைரஸ் பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளித்தபோது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமி நடவடிக்கைகள் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்தவகையில் கொரோனா பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளித்தபோது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது. வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஒரு வகையான இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும் தடுக்கப்படுகிறது.

இது குறித்து கன்சாஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியரான யுன்ஜியோங் கிம் கூறுகையில், ‘பூனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் இந்த புரோட்டீஸ் தடுப்பான்களை ஜிசி376 நாங்கள் உருவாக்கினோம். தற்போது அது விலங்குகளுக்கான மருந்தாக வர்த்தக ரீதியான தயாரிப்பில் உள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கிய பிறகு, இந்த வைரசுக்கு எதிராக இந்த தடுப்பானும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது பலரும் இதை ஒரு சிகிச்சையாக தொடர்கின்றனர். 

இந்த புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் ஜிசி376-ஐ டியூட்டிரேசன் மூலம் மாற்றியமைக்கும்போது, அது கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது’’ என அவர் தெரிவித்தார். 

click me!