4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது... ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 1, 2021, 5:02 PM IST
Highlights

​4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தது. 
 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் இருந்து மக்களை காக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தயக்கம் வந்த மக்கள் கூட, தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்க்க சரியான ஆயுதம் என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


இப்படி தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சிறப்பு தொகுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், புனேவில் இருந்து  4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. மத்திய தொகுப்பில் இருந்து 34 பெட்டிகளில் வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதாரத்துறை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதுவரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் வந்து சேரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

click me!