கன மழை பெய்யப்போகும் அந்த 9 மாவட்டங்கள்... வானிலை மையம் அறிவிப்பு..!

Published : Jul 05, 2021, 02:31 PM IST
கன மழை பெய்யப்போகும் அந்த 9 மாவட்டங்கள்... வானிலை மையம் அறிவிப்பு..!

சுருக்கம்

9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், உள் தமிழ்நாட்டில் நிலவும்  மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்,  நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம்  பிற்பகலில் ஓரளவு மூட்டத்துடனும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்