
பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே காதலர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் இந்த காதலர் தினம் கொண்டாடப்படும். காதலர் தினத்துக்கு முந்தைய வாரம் வேலெண்டைன் வீக் அதாவது காதல் வாரமாக பார்க்கப்படுகிறது.
அந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு உண்டு, அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி ரோஸ் டே, பிப்ரவரி 8-ந் தேதி புரபோஸ் டே, பிப்ரவரி 9 - சாக்லேட் டே, பிப்ரவரி 10 டெட்டி டே-வாகவும், பிப்ரவரி 11 பிராமிஸ் டே ஆகவும், பிப்ரவரி 12 ஹக் டேவாகவும், பிப்ரவரி 13 கிஸ் டேவாகவும், பிப்ரவரி 14 லவ்வர்ஸ் டேவாகவும் கொண்டாடப்படும்.
இதில் நேற்று ரோஸ் டே முடிந்துவிட்டது. இன்று புரபோஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. காதலை வெளிப்படுத்தும் தினமாக இது பார்க்கப்படுகிறது. காதலர்களின் முக்கியமான நாளாக இந்த புரபோஸ் டே கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் புரபோஸ் டே கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் புரபோஸ் டே என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.