
இன்றைய நவீன உலகில், மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் நம்முடைய உடல் எடையை அதிகரிக்க செய்துள்ளது. அதுமட்டுமின்றி, உடல் உடைப்பிலாமல் இருப்பது நம்மை சோம்பேறி ஆக்குகின்றது. அப்படி, குண்டாக இருக்கும் பெண்கள் உடல் எடையை, குறைத்து பிட்டாக கட்டுவதற்கு பல்வேறு முறைகளை கையாள்வார்கள். அவற்றில், உடல் எடையும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே, நாம் விரும்பி அணியும் உடை நம்மை ஒல்லியாக கட்டுவதற்கு, தேவையான ஸ்டைலிங் உடைகள் பற்றிய 8 டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பளிச் நிறங்களை தேர்வு செய்யுங்கள் :
பெண்கள் பலரும் விரும்பும் நிறம் கருப்பு. ஆனால், கருப்பு நிறம் பெண்களை குண்டாக காட்டும். எனவே,குண்டான உடல் வாகுள்ள பெண்கள் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. அதற்கு பதிலாக, பளிச்சென்ற நிறங்களில் ஆடை அணியலாம்.
இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் :
எப்போதுமே இறுக்கமான ஆடைகளை அணியும் போது கவனமாக இருக்க வேண்டும். குண்டாக பெண்கள் எப்போதுமே இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. பாடிகான் ஆடைகள் எனப்படும் உடலைக் கவ்வும் ஆடைகள் உங்களை மேலும் குண்டாக காட்டும். எனவே, உங்கள் உடலமைப்பை மறைக்கும் தளர்வான ஆடைகளை அணிவது பொருத்தமாக இருக்கும். இறுக்கமில்லாத கோடு போட்ட ஆடைகளை அணிய வேண்டும்.
சல்வார்:
சல்வார் பருமனான பெண்களுக்கு சுரிதார்களை விட சற்று இறுக்கமில்லாத சல்வார்கள் மிக அருமையாக இருக்கும். உங்களது கால்கள் சற்று தடிமனாக இருந்தால் பாட்டியாலா சல்வார்களை அணியலாம். இப்பொழுதெல்லாம் கரினா கபூர் முதல் நமது அனுஷ்கா ஷர்மா வரை அவற்றைத்தான் அணிகிறார்கள். எனவே நீங்களும் அணிந்து பார்க்கலாம். நன்றாக இருக்கும்.
சரியான ஃபேப்ரிக் :
தூய பருத்தி முதல் பளபளப்பான ஜார்ஜெட் வரை ஏகப்பட்ட துணி வகைகள் உள்ளன. எனவே, உடல்வாகுக்கு ஏற்ற துணியை தேர்வு செய்வது மிகவும் அவசியம். குண்டான தோற்றம் கொண்ட பெண்கள் லேசான ஃபேப்ரிக் வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய துணிவகைகள் உங்கள் அடர்ந்த தோற்றத்தை மறைத்து, ஒல்லியாக நேர்த்தியான பூசியது போன்ற தோற்றத்தைக் காட்டும்.
புடவைகளில் சரியான தேர்வு:
புடவைகள் புடவைகள் எல்லா வகையான பெண்களுக்கும் அம்சமாக இருக்கும். அதற்காக பருமனான பெண்கள் ஷிபான் அல்லது ஜார்ஜெட் புடவைகளை அணியக் கூடாது. மாறாக காட்டன் மற்றும் பாரம்பரிய பட்டுப் புடவைகளை அணிந்தால் மிக எடுப்பாக இருக்கும்.
நீளவாக்கில் இருக்கும் கோடுகளைத் தவிர்க்கவும் :
ஆடைகளில் என்ன வகையான டிசைன் இருக்கிறது என்பது உங்கள் தோற்றத்தை மெலிதாக்கியோ, பருமனாகவோ, வலைவுகளாகவோ காட்டும் தன்மைக் கொண்டது. குண்டான உடல் அமைப்புக் கொண்டவர்கள் நீளவாக்கில் கோடுகள் கொண்ட ஆடைகளைத் அணிய வேண்டும். இது உங்கள் தோற்றத்தை குண்டாக காட்டும்.
வண்ணமயமான அச்சு உள்ள ஆடைகள்:
ஹெவி பிரின்ட் செய்யப்பட்ட ஆடைகள் அதாவது, பூக்கள், கட்டங்கள், டிஜிட்டல் பிரின்ட் உட்பட பல்வேறு வண்ணமயமான அச்சுகள் கொண்ட ஆடைகளை தேர்வு செய்வது, குண்டாக பெண்களுக்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கும். டிசைன் அல்லது அச்சு இல்லாத பிளைன் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.
ஜீன்ஸ்:
பூட் கட் ஜீன்ஸ் இப்பொழுது இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் ஜெக்கிங்கள்தான் பேஷனாக இருக்கின்றன. தடிமனான பெண்கள் அவற்றை அணிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர்கள் லேட்டஸ்ட் பேஷன் ஆடைகள் அணிய முடியாது. ஆனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் பூட் கட் ஜீன்ஸ்களை அணியலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.