Yoga For Stress : மன நிம்மதிக்கு '1' யோகா போதும்!! மறக்காம தினமும் செய்ங்க போதும்!

Published : Aug 13, 2025, 01:44 PM IST
mental stress

சுருக்கம்

மன அழுத்தத்தை குறைக்க உதவும் சில யோகாசனங்கள் குறித்து இங்கு காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் யாருக்கு தான் மன அழுத்தம் இல்ல? வாழ்க்கை முறை, உணவு பழக்கம், பணி சூழல், குடும்ப சூழல் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உங்களது அன்றாட வாழ்க்கையை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும். இதனால் தான் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மன அழுத்தத்தை குறைக்க பலரும் பலவிதமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அதாவது தியானம், உடற்பயிற்சி, சுவாச பயிற்சி போன்றவை அடங்கும். இத்தகைய சூழ்நிலையில் இந்த பதிவில் மன அழுத்தத்தை குறைக்க உதவும் சில முக்கிய யோகாசனங்கள் குறித்து காணலாம்.

மன அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனங்கள் :

1. விஷாசனம் :

விஷாசனம் என்பது மரம் போல் நிற்கும் ஒரு நிலை. இந்த ஆசனம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் நேராக நிற்கவும். இப்போது வலது காலை உயர்த்தி இடது தொடையின் உட்புறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, கைகளை கூப்பி வணக்கம் சொல்வது போல வைக்க வேண்டும். கண்களை ஒரு புள்ளியில் குவித்து சமநிலையை பேண வேண்டும். பிறகு மெதுவாக மூச்சை வெளியே விட்டு கைகளை இறக்கி வலது காலை கீழே வைக்க வேண்டும். இதே போல இடது காலையில் மேலே தூக்கி வலது தொடையின் உட்புறத்தில் வைத்து செய்ய வேண்டும்.

விஷாசனம் நன்மைகள் :

- இந்த ஆசனம் உடல் மற்றும் மனநிலையை சமநிலைப்படுத்த உதவும்.

- கால் தசைகள் மற்றும் கணுக்கால் தசைகளில் பலப்படுத்தும்.

- மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

- முதுகெலும்பை பலப்படுத்தி முதுகு வலியை குறைக்கும்.

2. உஸ்ட்ராசனா :

உத்ராசனம் ஒட்டகபோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மண்டியிட்டு பிறகு பின்பக்கம் வழியாக கைகளை பாதங்களை தொட வேண்டும். இந்த ஆசனம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். ஆனால், வெறும் வயிற்றில் இந்த யோகாசனம் செய்தால்தான் நன்மைகள் கிடைக்கும்.

உஸ்ட்ராசனா நன்மைகள் :

- இந்த ஆசனம் முதுகு தண்டை நீட்டி தோரணையை மேம்படுத்த உதவும்.

- செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

- இந்த ஆசனம் மார்பு மற்றும் நுரையீரலை விரிவடையே செய்து சுவாசத்தை மேம்படுத்தும்.

- தோள்கள் மற்றும் கழுத்து தசைகளை வலுப்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது.

- இந்த ஆசன மன அழுத்தத்தை குறைத்து மன அமைதிக்கு வழிவகுக்கும்.

- நினைவாற்றலை அதிகரிக்க இந்த ஆசனம் உதவுகிறது.

3. புஜங்காசனம் :

புஜங்காசனம் என்பது பாம்பு படம் எடுப்பது போன்ற தோற்றத்தில் செய்யப்படும் ஆசனமாகும். இந்த ஆசனம் செய்ய முகம் குப்புறப்படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு கீழே தரையில் ஊன்ற வேண்டும். மூச்சை உள்ளிழுத்து தலை, மார்பு மற்றும் வயிற்றை தரையில் இருந்து மெல்லமாக உயர்த்த வேண்டும். ஆனால் இடுப்பு தரையில் இருக்க வேண்டும். உடலை மெல்லமாக உயர்த்தும்போது முதுகு வலையும், பாம்பு படையெடுப்பது போல தோற்றத்தில் இருக்கும். சில வினாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு பிறகு மூச்சை வெளியே விட்டு மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

குறிப்பு : இந்த ஆசனம் செய்யும்போது முதுகில் அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. உங்களுக்கு ஏதேனும் முதுகு வலி அல்லது உடல்நிலை பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி பிறகு தான் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

புஜங்காசனம் நன்மைகள் ;

- இந்த ஆசனம் மன அழுத்தத்தை குறைக்கும்

- முதுகெலும்பை நீட்டி முதுகு மற்றும் கை தசைகளை பலப்படுத்தும். மேலும் முதுகு வலியை போக்க உதவும்.

- இந்த ஆசனம் மார்பு மற்றும் வயிற்றை நீட்டுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்