
பூண்டு கஞ்சி வாயு தொல்லை, வயிற்றுவலி, வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு அருமருந்தாகும். இப்போது பூண்டு கஞ்சி ஈசியாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பூண்டு - 75 கிராம்
பச்சரிசி - அரை கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
காய்ச்சிய பால் - 1 கப்
செய்முறை :
இதற்கு முதலில் அரிசியை நன்றாக கழுவி, சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு பிறகு தண்ணீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பூண்டையும் தோல் நீக்கி வைக்கவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு பூண்டையும் சேர்ந்து வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கிடும் அதில் அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி சுமார் 6-7 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு அதன் மூடியை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விடுங்கள். இறுதியாக காய்ச்சிய பால் சேர்ந்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். அவ்வளவுதான் டேஸ்டியான பூண்டு கஞ்சி தயார்.
பூண்டு கஞ்சி ஆரோக்கிய நன்மைகள் :
1. வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கும்
பூண்டு கஞ்சி வயிற்றுப்புண், வயிற்று வலி மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
2. காய்ச்சலை போக்கும்
காய்ச்சல் சமயத்தில் பூண்டு கஞ்சி யை குடித்தால் உடலுக்கு நன்மை பயக்கும்.
3. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பூண்டு கஞ்சி வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை வலுவாக்கி, செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே பூண்டு கஞ்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. சளி மற்றும் இருமலுக்கு நல்லது
சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்க பூண்டு கஞ்சி குடிக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.