
தீபாவளி பண்டிகை வரப்போகிறது. இந்த பண்டிகை நாட்களில் எல்லோருடைய வீடுகளிலும் பண்டம் பலகாரங்கள் செய்வார்கள். அப்படி செய்யும் பலகாரங்கள் எப்போதும் போல் அல்லாமல் கூடுதல் சுவையாக இருக்க சில ட்ரிக்குகளை மட்டும் பயன்படுத்தினால் போதும். அதற்கு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். அவை என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தீபாவளி பலகாரம் சுவையாக செய்ய சிம்பிள் டிப்ஸ்கள் :
தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு முன் முதலில் மஞ்சள் பிள்ளையாரை அடுப்பு மீது வைத்து வணங்கி விட்டு பிறகுதான் பலகாரங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
1. தீபாவளிக்கு தேங்காய் எண்ணெயில் உங்களால் பண்டம் பலகாரங்கள் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மட்டும் சேர்த்தால் போதும். அதுவே தேங்காய் எண்ணெயில் செய்த ருசி மற்றும் மணத்தை தரும்.
2. தீபாவளிக்கு மிக்சர் செய்ய போகிறீர்கள் என்றால் அதில் ஒரு கைப்பிடி சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். மிச்சர் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும்.
3. இந்த தீபாவளிக்கு நீங்கள் ரவா லட்டு செய்யப் போகிறீர்கள் என்றால், அந்த மாவில் சிறிதளவு கற்பூரத்தை பொடியாக்கி கலந்து ரவா லட்டு செய்தால் நல்ல மனம் வீசும்.
4. தீபாவளிக்கு தேங்காயில் பர்பி செய்ய போகிறீர்கள் என்றால் முதலில் தேங்காயை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் ஊறவைத்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு அரைத்து பிறகு பர்பி செய்யுங்கள். பர்பி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும்.
5. வாழை இலையின் பின்பக்கத்தில் போலி தட்டினால் இலையும் சுருங்காது, போலியும் நன்றாக வரும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
6. தீபாவளிக்கு நீங்கள் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு தூக்கலா தெரியும்.
7. தீபாவளிக்கு மைசூர் பாகு செய்யப் போகிறீர்கள் என்றால் 1 கப் கடலை மாவிற்கு, 2 கப் சர்க்கரை மற்றும் 3 கப் நெய் சேர்த்து செய்யுங்கள். நாவில் வைத்தவுடனே மைசூர் பாகு கரைந்துவிடும்.
8. தீபாவளிக்கு ஸ்வீட் செய்வதற்கு சர்க்கரை பாகு தயாரிக்கும் போது அதன் மேல் ஒதுங்கும் அழுக்கை ஒரு கரண்டியால் எடுத்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் செய்யும் ஸ்வீட் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
9. தீபாவளிக்கு பண்டம் பலகாரங்கள் செய்யும் போது என்னை அதிகமாக பொங்காமல் இருக்க அதில் ஒரு துளி அளவு வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
10. தீபாவளிக்கு செய்த பலகாரங்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் இருக்க, ஒரு துணியில் ஒரு கைப்பிடி அளவு உப்பு சேர்த்து மூட்டை போல கட்டி அதை பலகாரங்கள் வைத்த டப்பாவில் போட்டு வைக்கவும். இப்படி செய்தால் பலகாரங்கள் எப்போது சாப்பிட்டாலும் புதியது போல சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.
மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் முயற்சித்துப் பாருங்கள் இந்த தீபாவளியை சுவையான இனிப்புகள் செய்து கொண்டாடி மகிழுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.