
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மளிகை பொருட்களை சேமிப்பது சற்று கடினமான விஷயம் தான். ஏனெனில் பருப்பு வகைகள், தானியங்கள், கடலைகள் போன்றவற்றை சரியாக சேமிக்காவிட்டால் அதில் வண்டு பூச்சிகள் வந்துவிடும். அதிலும் குறிப்பாக வெள்ளை மற்றும் கருப்பு கொண்டை கடலை வைத்திருக்கும் டப்பாவில் சின்னதாக பறக்கும் வண்டுகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
இந்த வண்டுகள் அளவில் தான் சிறுசு, ஆனால் அது கொண்டைக்கடலையில் துளையிட்டு அதன் உள்ளே நுழைந்து விடும். சமையலுக்கு கொண்டக்கடலையை பயன்படுத்தும் முன் அதை தண்ணீரில் ஊற வைக்கும் போது தண்ணீரின் மேல் அவை மிதப்பதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இப்படி பூச்சிகள் அரித்த கொண்டக்கடலையை சமையலுக்கு பயன்படுத்தினால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே பூச்சிகள், வண்டுகள் வராமல் கொண்டக்கடலையை சரியான முறையில் சேமிப்பது மிகவும் அவசியம். கொண்டைக்கடலையை சேமிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை மற்றும் பின்பற்றினால் போதும். கொண்டக்கடலையில் பூச்சிகள், வண்டுகள் வரவே வராது. இந்த பதிவில் கொண்டக்கடலையை சரியான முறையில் சேமிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
கொண்டக்கடலையை சரியான முறையில் சேமிப்பது எப்படி?
காய்ந்த மிளகாய் :
நீண்ட நாட்கள் கொண்டகடலையை சேமிக்க விரும்பினால் 4-5 காய்ந்த மிளகாவை கொண்டக்கடலை இருக்கும் டப்பாவில் போட்டு வைக்கவும். இதன் கடுமையான நெடிக்கு பூச்சி, புழுக்கள் வருவதை தடுக்கும். பருப்பு வகைகள் மற்றும் தானியத்தில் கூட காய்ந்த மிளகாய் பயன்படுத்தலாம்.
பிரியாணி இலை
கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருக்க அதன் டப்பாவில் சிறிதளவு பிரியாணி இலைகளே போட்டு வைக்கவும். இதிலிருந்து வரும் வாசனைக்கு பூச்சிகள் வரவே வராது. புழுக்களும் வெளியேறிவிடும். இந்த இலையானது ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மேலும் இந்த இலையின் வாசனையானது கொண்டக்கடலையில் சேர்ந்திருப்பதால், சமையலின் அதன் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
இலவங்கப்பட்டை
நீண்ட நாட்கள் கொண்டக்கடலையை சேமிக்க வைக்க விரும்பினால் அதன் டப்பாவில் சில துண்டு இலவங்கப்பட்டையை போட்டு வைக்கலாம். இலவங்கப்பட்டையில் இருந்து வரும் வாசனை பூச்சிகளை வெளியேற்ற உதவுகிறது.
இதை நினைவில் கொள் :
- நீண்ட நாட்கள் கொண்ட கடலை பிரஷ்ஷாக இருக்க வேண்டுமெனில், அதிகமாக அதை வாங்காமல் சிறிய அளவில் வாங்கி வைத்து சேமிக்கவும். அதுபோல ஒரே டப்பாவில் அதிக அளவில் கொண்டக்கடலையை போட்டு சேமிக்க கூடாது. இல்லையெனில் பூச்சிகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- சேமித்து வைத்த கொண்டக்கடலையில் 1-2 பூச்சிகள் இருப்பதை கண்டால் உடனடியாக அவற்றை சுமார் ஒரு மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். இப்படி செய்தால் ஈரப்பதம் முற்றிலும் நீங்கிவிடும். பூச்சிகள் வருவதற்கு என வாய்ப்புகளும் குறைந்து விடும். வெயில் இல்லாத மழை, குளிர் காலங்களில் கொண்டைக்கடலையை லேசாக வறுக்கவும்.
- வெள்ளை மற்றும் கருப்பு கொண்டைக்கடலையை எப்போதுமே காற்று புகாத கண்ணாடி ஜாடியில் வைத்து சேமியுங்கள். இதில் பூச்சிகள் சுலபமாக உள்ளே செல்ல முடியாது. குறிப்பாக ஜாடியில் ஈரப்பதம் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கொண்டைக்கடலையில் பூச்சிகள் அதிகமாக இருந்தால் பிற தானியங்களுடன் அவற்றை சேர்த்து வைக்கக் கூடாது. முடிந்த அளவிற்கு அவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக குப்பையில் போட்டு விடுங்கள்.
- கொண்டைக்கடலை மட்டுமல்ல எந்தவொரு மசாலா பொருட்களையும் வாங்குவதற்கு முன் முதலில் அதன் காலாவதி தேதியை சரி பார்க்கவும்.
- கொண்டைக்கடலையை கடையிலிருந்து வாங்கிட்டு வந்தவுடன் சுமார் ஐந்து நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து பிறகு எப்போதும் போல சேமிக்கவும். இப்படி செய்தால் அவற்றில் பூச்சிகளின் முட்டைகள் இருந்தால் கூட அழிந்து விடும்.
- மசாலாப் பொருட்களில் பூச்சிகள் வராமல் இருக்க கிச்சனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக கிச்சன் அலமாரியை ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
- கிச்சன் அலமாரியில் வேப்ப இலைகளை வைத்தால் பூச்சிகள் மசாலா பொருட்களில் வராது.
மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் படி கொண்டக்கடலையை சேமித்தால் இனிப்பூச்சிகள் தொல்லை இருக்காது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.