சீறும் காளைகள்.. திமிரும் வீரர்கள்.. ஜல்லிக்கட்டின் சிறப்பம்சங்கள்

By Kanimozhi PannerselvamFirst Published Jan 15, 2021, 5:55 PM IST
Highlights

இந்த ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் சிறப்புகளின் முக்கிய பங்கு. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று. ஏறு தழுவல் என்பது காளை மாட்டை குறிக்கும், முதலில் மாட்டை அந்த ஊரில் ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்கி, கொம்பை பிடித்து அந்த ரிப்பனை வீழ்த்துவதான் பாரம்பரிய விளையாட்டு.

இந்த ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த போட்டி வீர விளையாட்டின் மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலும் இதை ஆண்கள் தான் விளையாடுவார்கள். இது முதன் முதலில் தொடங்கியது மதுரை மாவட்டம். அங்கு வந்து ஆயிரக்கணக்கில் காளைகளும், அதற்கான வீரர்களும் களத்திற்கு வருவார்கள்.

இந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் இந்த இடங்கள் மிக மிக பிரபலமான ஜல்லிக்கட்டு இடங்கள். ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சமீபத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதற்காக, மொத்த உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு 5 நாள் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு பெருமை இந்த உலக தமிழர்கள் கொண்டாடும் மாபெரும் விழா.  
 

click me!