நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல்

By Kanimozhi PannerselvamFirst Published Jan 15, 2021, 5:43 PM IST
Highlights

மூன்றாவது நாள் மாட்டு பொங்கலை கொண்டாடுவார்கள்.

மூன்றாவது நாள் மாட்டு பொங்கலை கொண்டாடுவார்கள்.இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர விளையாட்டாக நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  மாட்டுப்பொங்கல் அன்று வருடம் முழுக்க நமக்காக உழைக்கும் பசுக்கள்,எருதுகளை கொண்டாடும் வகையில்,அவைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாட படுகிறது.பசுக்களில் எல்லா தெய்வங்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

காலை வீடு வாசலில் தண்ணீர் தெளித்து வண்ணத்தால் அலங்கரித்த கோலமீட்டு பார்ப்பவர்கள் கண்களை கவர வைப்பார்கள். பிறகு பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் செய்து கல் அடுப்பு மூட்டி அலங்கரித்த பானையில் உலை வைத்து புது அரிசி போட்டு பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் சிறியவர்,பெரியவர் என்ற பாகுபாடு இன்றி "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாகத்துடனும்,மகிழ்ச்சியுடனும் கத்தி கோஷமிட்டு மிகச்சிறந்த முறையில் கொண்டாவார்கள்.      

தோட்டத்தில் விளையும் பூசணிக்காய்,மொச்சக்கொட்டை வேகவைத்து கூட்டு செய்து இனிப்பு பலகாரம்,வடை பாயாசம் எல்லாம் செய்து படையல் போட்டு மனநிறைவோடு தெய்வங்களை வணங்குவார்கள். உழவர் திருநாளன்று நாம் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி,பலூன் கட்டி படையல் வைத்த சாப்பாட்டை அவைகளுக்கு ஊட்டி விடுவார்கள். 

click me!