சகோதரர்களின் நலனுக்காக கொண்டாடப்படும் காணும் பொங்கல்!

By manimegalai aFirst Published Dec 27, 2019, 6:35 PM IST
Highlights

பொதுவாக போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், பற்றி தெரிந்த பலருக்கும், பொங்கல் திருநாளின் நான்காவது நாள் அன்று கொண்டாடப்படும் காணும் பொங்கலின் சிறப்புகள் பற்றி பெரிதாக தெரியாது.
 

பொதுவாக போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், பற்றி தெரிந்த பலருக்கும், பொங்கல் திருநாளின் நான்காவது நாள் அன்று கொண்டாடப்படும் காணும் பொங்கலின் சிறப்புகள் பற்றி பெரிதாக தெரியாது.

இந்த நாளை காணும் பொங்கல், கன்னிப் பொங்கல், கண்ணு பண்டிகை என ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள்.  இந்த நாளில் நம்முடைய உறவினர்கள், மற்றும் அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வீட்டிற்கும் சென்று, அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதே இந்த நாளின் சிறப்பு.

ஆனால் தற்போது வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மட்டுமே நாம் சந்தித்து ஆசிர்வாதம் பெறுகிறோம். நகரங்கள் என்றால் அதுவும் சந்தீகமே. 

மேலும் இந்நாளில் பல்வேறு கிராமங்களிலும் பட்டிமன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், என இளைஞர்கள் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கூட பல்வேறு போட்டிகள் நடைபெறும்.

இந்நாளின் சிறப்பு:

இந்த நாளில் கன்னி பெண்கள் பொங்கல் வைத்து தங்களுடைய சகோதரர்களின் நலனுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்து கொள்வார்கள்.  இந்த வழக்கம் தற்போது ஒரு சில கிராமங்களில் மட்டுமே அதிகமாக பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கல் வைக்கும் பானையில் கட்டிய மஞ்சள் கொத்தை தீர்க்க சுமங்கலி கையால் வாங்கி, அதனை முகத்தில் போட்டு கொள்வதும் வழக்கம். 
 

click me!