மாலை நேரத்தில் மீண்டும் உயந்த தங்கம்..!

By ezhil mozhiFirst Published Dec 27, 2019, 5:26 PM IST
Highlights

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

மாலை நேரத்தில் மீண்டும் உயந்த தங்கம்..! 

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.18 அதிகரித்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.18 அதிகரித்து 3610 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 144  உயர்ந்து 29 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, 3714.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 712  ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 22 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 10 பைசா குறைந்து 50.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

click me!