குளித்த அடுத்த 5 நிமிடத்தில் உணவு சாப்பிடும் நபரா நீங்கள் ..! அய்யய்யோ.. இது உங்களுக்குத்தான்..!

By ezhil mozhiFirst Published Dec 27, 2019, 6:07 PM IST
Highlights

வேலைக்கு செல்லும் நபர் முதல் வீட்டில் இருக்கும் நபர்கள் வரை அனைவருமே என்ன செய்வார்கள் என்றால் குளித்து முடித்தவுடன் உணவை எடுத்துக் கொள்வார்கள். அதே போன்று வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக உண்ட உடனே குளித்து விடுவார்கள். 

குளித்த அடுத்த 5 நிமிடத்தில் உணவு சாப்பிடும் நபரா நீங்கள் ..! அய்யய்யோ.. இது  உங்களுக்குத்தான்..! 

நம் வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் அவ்வப்போது தவறுதலாக செய்து விடுவோம். அதற்கு காரணம் நேரமின்மை, பதற்றம், உடல் ஆரோக்கியம் குறித்த கவலை இல்லாமை என சொல்லிக்கொண்டே போகலாம். 

உதாரணத்திற்கு வேலைக்கு செல்லும் நபர் முதல் வீட்டில் இருக்கும் நபர்கள் வரை அனைவருமே என்ன செய்வார்கள் என்றால் குளித்து முடித்தவுடன் உணவை எடுத்துக் கொள்வார்கள். அதே போன்று வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக உண்ட உடனே குளித்து விடுவார்கள். 

இவ்வாறு உணவு உண்பதற்கு முன்பாகவும் உண்பதற்கு பின்பாகவும் உடனடியாக குளிக்க கூடாது என்பது குறிப்பிடதக்கது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இவ்வாறு செய்தால் ஜீரண மண்டலம் சரிவர வேலை செய்யாமல் ஜீரண கோளாறு ஏற்படும். உடல் உறுப்புகள் சரிவர இயங்காத நிலை ஏற்படும். காரணம் நமது உடல் வெப்பம் சராசரியாக 37 டிகிரி செல்சியஸ். காலநிலை மாற்றம், தட்பவெப்பநிலை மாற்றம் என எதுவாக இருந்தாலும் எந்த  ஒரு தருணத்திலும் சாதாரண உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் உடல் வெப்பநிலையை பேணிக் காக்கப்படும்.

ஆனால் நாம் குளித்து விட்டு உடனடியாக சாப்பிடும்போது உடல் சற்று குளிர்ச்சி அடைந்து இருக்கும். இது போன்ற ஒரு தருணத்தில் ஜீரணம் சரியாக நடைபெறாது. அதேபோன்று உணவு உண்ட பின் உடனடியாக குளித்தாலும் செரிமானம் சரியாக இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி நேரம். இதனால்தான் உண்ட உடனோ அல்லது உண்பதற்கு முன்போ உடனடியாக குளிப்பது தவறு என்கின்றனர். 

இது ஒரு பக்கம் இருக்க... ஒருவர் குளித்துவிட்டு சாப்பிடும்போது குளித்தபின் குறைந்தது முக்கால் மணி நேரம் பிறகுதான் சாப்பிடவேண்டும். அதேபோன்று உண்ட பின்பு இரண்டு மணி நேரம் பிறகு தான் தான் குளிக்க வேண்டும்.. என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதனை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

click me!