"இந்தியா முதல் சாதனை"..! கொரோனாவிற்கு "பிளாஸ்மா சிகிச்சை" வெற்றி ..! வியக்கும் உலக நாடுகள் ..!

By ezhil mozhiFirst Published Apr 21, 2020, 3:38 PM IST
Highlights

பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவர்கள் குணமடைய வாய்ப்பு உள்ளது என இந்திய மருத்துவர்கள் கருதினர். இதற்காக கேரளா மற்றும் தமிழகம், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது குறித்து விண்ணப்பித்து அனுமதி கேட்டு இருந்தனர்.

"இந்தியா சாதனை"..! கொரோனாவிற்கு "பிளாஸ்மா சிகிச்சை" வெற்றி ..! வியக்கும் உலக நாடுகள் ..! 

கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்த ஒருவருக்கு மேற்கொண்ட பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பது பெரும் நம்பிக்கை கொடுத்து  உள்ளது.

கொரோனா நோய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மேற்கொண்ட"பிளாஸ்மா சிகிச்சையால்" உடல் நலம் நல்ல முன்னேற்றம் அடைந்து குணமடைந்து இருப்பது பெரும் நம்பிக்கை கொடுத்து உள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு மெல்லமெல்ல அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த ஆரம்பக்கட்டத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் மேலும் 19 நாட்கள் நீட்டித்து மொத்தம் 40 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில் உலகின் வளர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்க மிகவும் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனாலும் கொரோனாவின் மரபணு மாற்றத்தால் சரியான மருந்து கண்டுப்பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர். 

இந்த ஒரு நிலையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவர்கள் குணமடைய வாய்ப்பு உள்ளது என இந்திய மருத்துவர்கள் கருதினர். இதற்காக கேரளா மற்றும் தமிழகம், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது குறித்து விண்ணப்பித்து அனுமதி கேட்டு இருந்தனர்.

இந்த ஒரு நிலையில் டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி  கொரோனா அறிகுறிகளுடன் 49 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சுவாச பிரச்சனையும் இருந்ததால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. இப்படி ஒரு தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முன்வருமாறு மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதியன்று அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இரண்டு முறை மீண்டும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்தபோது நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் நெகட்டிவ் என வந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க இவருடன் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தந்தைக்கும் (80 வயது) பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அவருடைய உடல் படு மோசம் அடைந்ததால் ஏப்ரல் 15 ஆம் தேதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஒருவர் குணமடைந்து இருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை. மேலும் உலக நாடுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் இந்தியா பிளாஸ்மா சிகிச்சை மூலம்   ஒருவரை குணமடைய செய்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!