5 நாடுகளில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்..! பயத்தில் விழி பிதுங்கும் உலக நாடுகள்..!

By ezhil mozhiFirst Published Apr 21, 2020, 2:20 PM IST
Highlights

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16லட்சத்தை தாண்டி உள்ளது என்பது கூடுதல். 

5 நாடுகளில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்..! பயத்தில் விழி  பிதுங்கும் உலக நாடுகள்..! 

உலகம் முழுவதும் கொரோனாவால் பலி எண்ணிக்கை 1.70 லட்சத்தை தாண்டியதில், உலகில் 5 நாடுகளில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1939 பேர் உயிரிழந்து உள்ளனர். உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வளர்ச்சி அடைந்த பல நாடுகள், கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் இதுவரை சரியான மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிவேகமாக பரவி வருகிறது. ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16லட்சத்தை தாண்டி உள்ளது என்பது கூடுதல். இந்த கணக்கின் படி, 210 கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் மட்டும் 42514 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சுமாராக மொத்த உலக அளவிலான உயிரிழப்பில் நான்கில் ஒரு பங்கு மக்கள் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தை தாண்டி உள்ளது, உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!