மனம் வருந்திய முதல்வர் எடப்பாடி "அதிரடி ட்வீட்"..! அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் இருங்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 21, 2020, 01:36 PM IST
மனம் வருந்திய முதல்வர் எடப்பாடி "அதிரடி ட்வீட்"..! அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் இருங்கள்..!

சுருக்கம்

நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கே கொரோனா தாக்கி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் புதைக்க கூட இடம் தர மறுத்த சம்பவம் அனைவருக்கும் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தாமாக முன்வந்து உள்ளது.   

மனம் வருந்திய முதல்வர் எடப்பாடி "அதிரடி ட்வீட்"..! அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் இருங்கள்..!

கொரோனா நோய்த்தொற்றால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் தடுத்த விவகாரத்தையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,   

"கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்" என குறிப்பிட்டு உள்ளார் 

 

மாநகராட்சி அறிவுறுத்தல் 

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி நேற்று மீண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தது 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அரசு வழிகாட்டுதலின்படி உடல்களை கவனமாக தகனம் செய்ய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது, அச்சமும், கவலையும் தேவையில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில்,நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கே கொரோனா தாக்கி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் புதைக்க கூட இடம் தர மறுத்த சம்பவம் அனைவருக்கும் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தாமாக முன்வந்து உள்ளது. 

இப்படி ஒரு நிலையில், மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துக்கொள்ளுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்