வெளியானது..உயிரிழந்த மருத்துவரின் "அழகிய குடும்ப புகைப்படம்"..! இவருக்கா இப்படி ஒரு நிலைமை என புலம்பும் மக்கள்

By ezhil mozhiFirst Published Apr 21, 2020, 11:18 AM IST
Highlights

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான சைமன் என்பருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வெளியானது..உயிரிழந்த மருத்துவரின் "அழகிய குடும்ப புகைப்படம்"..! இவருக்கா இப்படி ஒரு நிலைமை என புலம்பும் மக்கள்!

கொரொனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததும்,அதன் பிறகு பல்வேறு கட்ட  இன்னல்களை தாண்டி ஒரு வழியாக அவருடைய நண்பரே அடக்கம் செய்த செய்தியும் அனைவருக்கும்  பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவருடைய குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது 

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான சைமன் என்பருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ஏற்கனவே சிறுநீரக கோளாராறு காரணமாக டையாலிஸ் சிகிச்சையில் இருந்த அவர், கொரோனாவின் தாக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார்.இச்சம்பவம் மருத்துவர்களையும் செவிலியர்களையும் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. 

இந்நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேர் மீது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தால், ஊரடங்கு உத்தரவு மீறல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர். 
 
குடும்ப புகைப்படம் 

இந்த நிலையில், மருத்துவர் சைமன் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் தேவாலயத்திற்கு முன் நின்று எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஆசையாய், ஆனந்தமாய் இருப்பது உணர முடிகிறது. அவர் நலமுடன் இருக்கும் போது, சென்ற இடங்களில் எல்லாம் ஒரு மருத்துவராய் அவருக்கு கிடைத்த மரியாதை, அவரிடம் சிகிச்சை பெற்று குணமானவர்கள் என எத்தனையோ பேர் நன்மை அடைந்து உள்ளனர்.

ஆனால் கொரோனா பாதித்து உயிரிழந்த மருத்துவர் சைமனின் இறுதி சடங்கு கூட செய்ய முடியாமலும், சடலத்தை புதைக்க கூட முடியாமலும் போன சம்பவம் நினைத்து பார்க்கும் போது பெரும் துயரத்தை  கொடுக்கிறது. இந்த ஒரு நிலையில், மருத்துவர் சைமனின் குடும்ப புகைப்படத்தை பார்ப்பவர்கள் எல்லாம்,  அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இறந்த பின்  யாராக இருந்தாலும்.. அவர் மருத்துவராக இருந்தாலும்.. கொரோனாவால் உயிரிழப்பு என்றால்.. இதுதான்  நிலைமையோ சிந்திக்க வைக்கிறது.  

click me!