தப்பித்தது 2 மாநிலங்கள்..! கொரோனா இல்லாத மாநிலம் என்பதால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்!

By ezhil mozhiFirst Published Apr 21, 2020, 12:16 PM IST
Highlights

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுவாங் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித குலத்திற்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது. உலக நாடுகளும் இதற்கு மருந்து கண்டுப்பிடிப்பதில் மும்முரமாக இறங்கி உள்ளது.

தப்பித்தது 2 மாநிலங்கள்..! கொரோனா இல்லாத மாநிலம் என்பதால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்! 

இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மணிப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 
 
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுவாங் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித குலத்திற்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது. உலக நாடுகளும் இதற்கு மருந்து கண்டுப்பிடிப்பதில் மும்முரமாக இறங்கி உள்ளது.

தற்போது இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், 21 நாட்கள் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் 19 நாட்கள் நீட்டித்து மே 3 வரை 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு உள்ளது.

இந்தியாவில், மகாராஷ்ராவில் பாதிப்பு 4000 நெருங்கும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,265 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்  பாதிப்பு குறைவாக உள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்று முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து 2 ஆவது மாநிலமாக மணிப்பூர் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி  இருக்க மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக கொரோனா தொற்று குறைய வேண்டுமென்பதற்காக ஊரடங்கு உத்தரவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது. 

click me!