பழங்காலத்தில் நம் மக்கள், வாழை இலையில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் . ஆனால் தற்போது பிளாஸ்டிக் தட்டு , பிளாஸ்டிக் உணவு என்ற அளவிற்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது.இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும் பிளாஸ்டிக் இலைகளையும் , பிளாஸ்டிக் தட்டுகளையும் தான் பயன்படுதிகிறோம்.அதே சமயத்தில், இன்றைய இளம் தலைமுறையினர் சற்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.அதாவது கொஞ்ச, கொஞ்சமாக பழைய சோறு, ஊறுகாய் உண்பது மண் பாத்திரதில் சமைப்பது வாழை இலையில் உண்பது என அனைத்திற்கும் மக்கள் மாறி வருகின்றனர்.சரி வாழை இலையில்உண்பதால் என்ன பயன் என்பதை பார்க்கலாம்வயிற்றுப்புண் ஆறும் மற்றும் உண்ணும் உணவு மிக எளிதில் ஜீரணமாகும்.காரணம் இலையில் உள்ள குளோரோபில், இது அனைத்து நச்சுத்தன்மையும் நீக்குகிறதுதோல் பளபளப்பானதாக மாறும்முடியை என்றும் கருமையாக வைத்துக்கொள்ளும்வாழை இலை பயன்படுத்திவிட்டு வீசினால், மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறுகிறதுவாழை பட்டையிலிருந்து , எடுக்கப்படும் சாறு மருந்தாக பயன்படுகிறதுஇத்தைகைய சிறப்பு வாய்ந்த வாழை இலையை பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக உடல் நலத்துடன் வாழலாம்