அமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்...! ஹோண்டா நிறுவனம் அதிரடி சலுகை...!கார் தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் பிரபலமான ஹோண்டா நிறுவனம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, தற்போது கோவாவில் நடைபெற்று வரும் "கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்"என்ற ஆபர் மூலமாக ஹோண்டா ஜாஸ் மற்றும் அமேஸ் உள்ளிட்ட சமீபத்தில் அறிமுகமாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த கார்கள் மீதான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கார்களை வாங்கும் போது அமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்டை பரிசாக வழங்குகிறது இந்த நிறுவனம். இந்த சலுகை கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதை ஒட்டி, இந்த சிறப்பு சலுகையை ஹோண்டா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுதற்போது வெளியாகி உள்ள இந்த சிறப்பு சலுகை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது