ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானமான ஆறாமிடத்திற்கு மாறுகிறார். ஆறாமிடத்தில் இருந்து உங்களது தனஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தைரிய ஸ்தானத்திலும் கேது பாக்கிய ஸ்தானத்திலும் சனி சப்தம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால், எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.அரசியல் துறையினருக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.கார்த்திகை 2, 3, 4 பாதம்:உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.ரோகிணி:தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மிருகசிரீஷம் 1, 2, பாதம்:கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வதால் பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.